பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

P. முத்துவேங்கடாசல துரை 91

வாழ்த்தினார் "அதிகாலையில் எழுந்து காலைக் கடன்களை முடித்துக் கொண்டு, சிற்றுண்டி உண்டு ஊர் திரும்புங்கள், கோவையில் காத்திருக்க வேண்டா. அது பயன்படாது நல் இரவு" என்று கூறி விடைகொடுத்தார்

திரு சாம்பசிவம் பிள்ளையின் அறிவுரைதான் பயன்படத் தக்கது உலகியலை யொட்டியது என்று நினைந்தவண்ணம் நான் தங்கும் இடத்தை அடைந்தேன் மறுநாள் கோவை வந்து துறையூர் திரும்பினேன். மறுநாள் சின்னதுரையைச் சந்தித்துப் போய் வந்த வரலாற்றை விரிவாக உரைத்தேன். நிர்வாகத்தை வி.ஆர்.ஆர் குறைவாகப் பேசியதை முற்றிலும் மறைத்து விட்டேன் அப்போது தாளாளர் சின்னதுரை பெருநிலக்கிழவர் அரண்மனைக்கு எதிரிலுள்ள உயர்நிலைத் தொடக்கப் பள்ளியின் மேல் மாடியிலுள்ள அறையில் தங்கியிருந்தார். தந்தையார் உடல் நிலை குன்றியிருந்தது. அரண்மனையில் புகுந்து நிர்வாகத்தைக் கைப்பற்றும் திட்டத்தில் இருந்தார். அதற்கேற்ற வாய்ப்பை எதிர் நோக்கிக் கொண்டிருந்த காலம் அது அவர் செலவுக்கு என்னிடம் தந்த ரூ. 60/-க்கு சல்லிக்காசு விடாமல் ஒரு சிறிய குறிப்பேட்டில் கணக்கு எழுதி வைத்திருந்தேன் அதைக் காட்டினேன் அதில் ரூ. 1-10-0 மீதி இருந்தது தெரிந்தது. அதை மட்டும் கவனித்துக் கொண்டார் வாய்மட்டிலும், "சரிதான் போங்கள். இஃது என்ன பெரிய கணக்கு?" என்று அசட்டையாக ஒலித்தது இன்னும் ஒரு வாரத்தில் சென்னை சென்று வரவேண்டும்" என்ற திட்டத்தைக் கூறி விடைபெற்றேன்.

நினைவு - 8 : மே திங்கள் முதல் வாரத்தில் (1943 சென்னை பயணத்திற்கு ஆயத்தமானேன். ரூ. 60/= செலவுக்குத் தந்தார் தாளாளர் பன்மொழில் புலவர் வேங்கடாராஜூலு ரெட்டியார் இல்லத்தில் தங்கி நடவடிக்கைகளைக் கவனித்தேன். என் ஆசிரியர் கே. இராமச்சந்திர அய்யர் அப்போது அவர் குழித்தலை கழக உயிர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் ஒரு பரிந்துரைக் கடிதத்தை "எய்ப்பினில் வைப்பியாக இருக்கட்டும்" என வாங்கி வைத்துக் கொண்டிருந்தேன்