பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 நீங்காத நினைவுகள்

முன்பு முசிறியில் பள்ளியின் துணை ஆய்வாளராக இருந்த சி சிங்காரவேலு முதலியார் அப்போது சைதாப்பேட்டை மாவட்டக் கல்வி அதிகாரியின் தனி அலுவலராகப் (Personal Assistant) பணியாற்றி வந்தார். அவரைச் சந்தித்து அவரை இட்டுக் கொண்டு கல்வி இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்று நான்காம் படிவம் திறக்கும் நிலைபற்றி ஆய்ந்ததில் வி.ஆர்.ஆர். பரிந்துரைக்காததுமன்றிக் கடுமையாக எழுதியதும் தெரிந்தது சிங்காரவேலு முதலியாரும் "வி.ஆர்.ஆர் எழுதியவற்றை எவராலும் மாற்ற முடியாது அலுவலகத்தில் அதைப்புறக்கணித்துக் குறிப்பு வைக்க எவருக்கும் துணிவு இருக்காது. இயக்குநர் ஆர்.எம்.ஸ்ட்ராத்தம் துரையும் முதலியார் பரிந்துரைக்கு விரோதமாகச் செய்ய மாட்டார். என்ன கெய்வது? இறைவன் விட்ட வழி இதுதான் என்று சொல்லித் தம் இயலாமையைக் கூறித் தம்மைக் கழற்றிக் கொண்டார்.

திரு. சிங்காரவேலு முதலியாரிடம், "ஐயா, நான்காம் படிவம் திறப்பதற்கு மறுத்துவிடும் ஆணை எங்கள் தாளாளருக்குப் போகாமல் என் கையில் கின்டக்க ஏற்பாடு செய்யுங்கள். அதற்கு மேல் இறைவன் ஆணையால் நான் முயல்கின்றேன். என்று கேட்டுக் கொண்டேன். அவரும் உரிய பகுதியின் தலைவரை எனக்கு அறிமுகம் செய்து ஆணையை என்னிடம் தருமாறு வேண்டினார் அவரும் இதற்கு ஒருவாரம் தவணை சொன்னார் இதற்கிடையில் கே. இராமச்சந்திர அய்யர் தந்த பரிந்துரைக் கடிதத்துடன் இதுவே நான் வைத்திருந்த மலரவன் கணை V.S. இராமச்சந்திர அய்யரைச் (Section Officer) சந்தித்து அவரிடம் நல்ல உறவு கொண்டேன். அவரும் மறுப்பு ஆணை துறையூருக்குப் போகாமல் என் கையிலேயே கிடைக்க ஏற்பாடு செய்தார் ஆணையும் கிடைத்து விட்டது

நினைவு 9 : எப்படியாவது உடன்பாட்டு ஆணையைப் பெற்றுக் கொண்டுதான் துறையூர் திரும்ப வேண்டும் என்று V.S. இராமச்சந்திர அய்யரிடம் சொன்னேன். நாள்தோறும் படியாய்க்கிடந்தேன் அவர் வீட்டு வாசலில்.15 நாட்கள். இந்தநிலை.