பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

P. முத்துவேங்கடாசல துரை 93

சென்னையில் அப்போது உணவு பங்கீட்டு நிலை காலை உணவு மட்டிலும் (Lunch) தம் வீட்டில் உண்ணுமாறு கட்டளை உணவு விடுதி உணவால் என் உடல் கெடும் என்பது அவர் தாயுள்ளம் நினைத்தது போலும், 15 நாட்கள் உணவு கொண்டதும் அவருடன் அலுவலகம் போவேன். இந்தப் பிரச்சினை தீரும் வழியை அவர் மனம் ஆய்ந்து கொண்டிருந்தது பல நாட்கள் கவனித்ததில் என் கடன் பணி செய்து கிடப்பதே' என்ற குறிக்கோளுடன் செயற்பட்டதைக் கண்டேன். மாவட்ட ஆட்சியின்கீழ் உள்ள பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் பலர் அவரைச் சந்தித்ததையும், அவர்கட்கு வேண்டிய உதவிகளைச் செய்ததையும் நேரில் கண்டமையால் அவர் பெருங்குணம் உறுதியாயிற்று.

ஒன்றிரண்டு நாட்களில் நான்காம் படிவம் திறக்க மறுத்த ஆணையை மறு ஆய்வு செய்து புதிய ஆணை பிறப்பிக்கக் கோரி ஓர் அழகிய விண்ணப்பத்தை நன்முறையில் நான்கு படிகளைத் தட்டச்சு செய்ய ஏற்பாடு செய்தார் அதில் தாளாளருக்குப் பதிலாக என் கையெழுத்திடச் செய்தார். முதற்படி (1 திருச்சி மாவட்டக் கல்வி அதிகாரி (2 கோவை மண்டலக் கல்வி ஆய்வாளர் ஆகியோர் மூலம் சென்னைக் கல்வி இயக்குநருக்கு அனுப்பச் செய்தார். அடுத்து, விண்ணப்பத்தின் இரண்டாவது, மூன்றாவது படிகளை முறையே சென்னைக் கல்வி இயக்குநருக்கும் கோவை மண்டல ஆய்வாளருக்கும் நேராக அனுப்பப் பெற்றன.

கல்வி இயக்குநருக்கு நேராக அனுப்பப்பெற்ற விண்ணப்பத்தின் நகலைக் கொண்டே விரைவில் காரியத்தைச் சாதிக்க வேண்டும் என்பது திரு. V.S.இராமச்சந்திர அய்யரின் திட்டம் தனியார் பள்ளிகளைப்பற்றிக் கவனிக்கும் அலுவலகப் பகுதியில் பணியாற்றும் எழுத்தர், தலைமை எழுத்தர் இவர்களிடம் தொடர்பு கொண்டு உரிய முறைகளில் விண்ணப்பத்தின்மீது நல்ல பரிந்துரைக் குறிப்புகளை எழுதச் செய்தார். அவசரப்படாமல் நான்கு ஐந்து நாட்கள் அலுவலகத்திலேயே இதைச் சுற்றிவரச் செய்து இயக்குநரின் தனி எழுத்தர் இவர் வயோதிகவைணவர் மூலம் கோப்பில் இயக்குநரின் கையெழுத்துப் பெற வேண்டும் என்பது ஒரு முயற்சி.