பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 நீங்காத நினைவுகள்

இயக்குநர் பெரும்பாலும் பொலொட்டோ விடுதியில் இப்போது அந்த இடத்தில் கன்னிமேரா விடுதி உள்ளது குடி, கூத்து முதலி யவற்றில் ஈடுபட்டு அங்கேயே தங்கியிருப்பது வழக்கம். முக்கியமான கோப்புகளை அங்குத்தான் பார்ப்பது, அவற்றின்மீது ஆணைபிறப்பிப்பது என்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்தச் சூழ்நிலையில்தான் எங்கள் பள்ளியைப்பற்றிய கோப்பின்மீது ஆணை பிறப்பிக்கப் பெற்றது. இந்தச் செய்தியை மகிழ்ச்சியுடன் எனக்குத் தெரிவித்தார் திரு. இராமச்சந்திர அய்யர். ஒன்றிரண்டு நாட்களில் ஆணையையும் எனக்குக் கிடைக்கச் செய்தார்.

இந்த மகிழ்ச்சிச் செய்தியைச் சின்னதுரைக்குத் தந்தி மூலம் தெரிவித்துவிட்டு ஒன்றிரண்டு நாட்களில் சென்னையில் தங்கிவிட்டேன். உமாபதி ரெட்டியார், P. மாதுர்பூதம், T.S.இராமய்யா இளம் நிலை ஆசிரியர்கள் இவர்கட்குத் கடிதங்கள் எழுதித் துறையூரிலுள்ள மூன்று சினிமாக் கொட்டகை உரிமையாளர்களிடம் தொடர்பு உண்டு. ஜூன் முதல் நான்காவது படிவம் திறக்கப்படுகிறது என்ற செய்தியை விளம்பரப் படுத்த ஏற்பாடு செய்தேன். பத்து நாட்கள் இந்த விளம்பரம் வந்து கொண்டிருந்தது. நழுவம் (Side) எழுதுதல் முதல் விளம்பரம் போடும் வரை அன்புதானமாகவும் பெறச் செய்தேன். சினிமாக் கொட்டகை உரிமையாளர்களும் இந்தக் கைங்கரியத்தை உவப்புடன் செய்து மகிழ்ந்தனர். இரண்டு நாட்கள் கழித்து துறையூர் திரும்பினேன். இதில் நான்பட்ட துன்பங்களையும் சாணக்கியத்தையும் ஆதியோடந்தமாக எடுத்துரைத்தேன் துரை கேட்டாரேயொழிய பாராட்டு மொழியே இல்லை. சின்னதுரை கொடுத்த ரூ. 60/= விரிவான கணக்குகளைக் காட்டினேன். இப்போதும் ரூ. 1-6-0 மீதி இருந்தது. இந்தத் தொகையையும் கவனித்துக் கொண்டார்.

நான் சென்னையில் தங்கியிருந்த இடம் வாடகையின்றி அமைந்தது. ஒரு நாளில் ஒருமுறை உணவு திரு. இராமச்சந்திர அய்யர் இல்லத்தில் பெற்றேன். இன்னும் ஒரு நாற்பது ரூபாய் செலவு பலவிதங்களில் இலவசமாகவே நடைபெற்றது. இவற்றையெல்லாம் துரைக்குத் தெரிவித்தேன். எதைப்பற்றியும் மகிழாவிட்டாலும்