பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூல்முகம்

நாடிப் புலங்கள் உழுவார் கரமும்,

நயவுரைகள் தேடிக் கொழிக்கும் கவிவாணர் நாவும்,

செழுங்கருணை ஒடிப் பெருகும் அறிவாளர் நெஞ்சும்,

உவந்துநடம் ஆடிக் களிக்கும் மயிலே உன் பாதம்

அடைக்கலமே!

- கவிமணி

காலவெள்ளத்தில் தோன்றியும் மறைந்தும் வரும் மனிதர் கூட்டங்களில் யானும் ஒருவன், மூன்றாண்டுப் பருவத்தில் தந்தையை இழந்து என் அன்னையால் பராமரிக்கப் பெற்றவன். திண்ணைப்பள்ளி முதல் கல்லூரிப் படிப்பு வரையில் இறையருளால் எனக்கு வாய்த்த நல்லாசிரியர்களால் உருவாக்கப் பெற்றவன். சிற்றினம் சேராமல் இறையருளால் காக்கப் பெற்றவன். நல்ல நண்பர்கள் வாய்க்கப் பெற்றவன்.

என் நீண்டவாழ்வில் (அகவை 83) எத்தனையோ பெரியார்களுடன் பழகியவன். ஏற்கெனவே முப்பது பெரியார்களுடன் பழகியதால் நேரிட்ட நினைவுகளை "மலரும் நினைவுகள்" (1989) என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டுள்ளேன். இப்போது "நீங்காத நினைவுகள்" என்ற தலைப்பில் இருபது பெரியார்களுடன் பழகியதால் ஏற்பட்ட நினைவுகள் பதிவு செய்யப்பெற்று நூலாக வடிவம் பெறுகின்றன. இப்பெரியார்களில் நிலக்கிழார் ஒருவர் தன வணிகர்கள் இருவர் பேராசிரியர்கள் மூவர்

1 மலரும்மாலையும் - 1

ix