பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

P. முத்துவேங்கடாசல துரை 97

கழிப்பறைகள், ஆசிரியர்கள் இருக்கை வசதிகள் முதலியவற்றிற்கு விடுமுறை நாட்களில் ஏற்பாடு செய்தல் வேண்டும். இவையெல்லாம் நன்முறையில் ஒழுங்குபட நிறைவேற்றுவதற்கு நான் பட்டபாட்டை அந்த ஆண்டவன்தான் அறிவான். பள்ளிகள் சாலைக்குக் கிழக்கிலும், மேற்கிலுமாக இரண்டு இடங்களில் அமைந்திருந்தமையும் மிதிவண்டியில் கோடை வெயிலில் உணவு கொள்வதையும் மறந்து அலைவதைச் சின்னதுரை உணர்வதில்லை. பார வண்டியை இழுத்துச் செல்லும் மாடுகள் படும் பாட்டை வண்டியோட்டி நன்கு அறிவான். நிலையறிந்து வண்டியை நிழலில் நிறுத்துவான். மாட்டிற்கு நீர்விடாய் இருக்குமென்று உரிய நேரங்களில் தண்ணீர் காட்டுவான். மாலை நேரத்தில் பருத்திக் கொட்டை, புண்ணாக்கு கலந்த பச்சரிசித் தவிட்டை உண்பிப்பான். இந்த வண்டியோட்டியின் இரக்கம் கூட சின்ன துரைக்கு இல்லையே என்று என்னையே நான் நொந்து கொண்டேன். பள்ளிக் கட்டட வேலையைக் கவனிக்கும் பொறுப்பெல்லாம் தலைமையாசிரியருடையது என்று நினைத்துக் கொள்வார். நான் மகிழ்ச்சியாகவே இவற்றைக் கவனித்து வந்தேன். நான் கவனிக்காவிட்டால் மாணவர்கள் வசதிக்கேற்றபடி கட்டடங்கள் அமையா. பணிச்சுமையைக் கண்டு என்றுமே நான் முகஞ் சுளித்ததில்லை. பணியாற்றும் என் திறமையைக் கண்டு சின்னதுரை ஒரு “பாராட்டுமொழி கூட நல்கவில்லை என்பதுதான் என் குறை: பிறரிடமாவது என் உழைப்பைப் பாராட்டியிருக்கலாம். அதுவும் செய்யவில்லை. நான் படும் சிரமங்களையெல்லாம் பிறர் கண்டு அவர் காதில் போட்டதை அறிந்து கொண்டேன். பணியே பரமனின் வழிபாடு" (Work is worship) என்பதை அந்தப் பரமனே எனது பிறப்புரிமையாகத் தந்ததை அடிக்கடி எண்ணும்போது மெய் மயிர் சிலிர்க்கின்றது.

இன்னும் கல்வித்துறை நிபந்தனைப்படி ரூ. 5000/- வங்கியில்

போட வேண்டும். கட்டண வசூல் ஏழு மலையான் உண்டிபோல்

வசூலாகி வந்தது. அதிலேயே ரூ. 10000 போட்டு விடலாம்.

7