பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 நீங்காத நினைவுகள்

உடனே கல்வித் துறையினருக்கு இச்செய்தியைத் தெரிவித்து எல்லா நிபந்தனைகளும் நிறைவேற்றப்பெற்றுவிட்டனவாக எழுதினேன்.

讓 證鹼 發 姆 轟響 ↔ ↔ 扁 聯聯峭緣贈 鬱 彝 ↔ ↔ • 軸論都輯 曲 ---3

சின்னதுைைர சிக்கனக்காரர். கஞ்சப்பிரபு என்னுடைய ஊழ்காரணமாக அவர் வழி பலவிதங்களில் எனக்குப் படிப்பினைகளை நல்கின.

(1) பிச்சைக்காரன் சோற்றில் சனீஸ்வரன் புகுந்தாற்போல ஏழை ஆசிரியர்களின் ஊதியத்தில் பிடித்தம் எனக்குச் சிறிதும் உடன்பாடு இல்லை. ஒரு நிலையில் அனைவரது பிடித்தங்களும் நிறுத்தப்பெற்று நான் மட்டிலும் ரூ 70/= தரவேண்டியிருந்தது. கேட்டதற்கு "உமக்குத்தான் குழந்தைகள் இல்லையே. கொடுத்தால் என்ன? என்று சொல்லிவிட்டார். "அரண்மனைப் பிரவேசத்தால் சுக்கிரதசை வந்துவிட்டதே. இன்னும் உங்களுக்கு இந்தப் பிச்சைக்காரபுத்தி எதற்கு?" என்று உள்ளுக்குள் நானே சொல்லிக் கொண்டேன். அப்போது T.S. இராமய்யா சொன்னார்: ஐயா, நம் காலத்திற்குள்ளயே சின்ன ஜமீந்தாரைவிடக் கேவலமான நிலை இக்குடும்பத்திற்கு வரும்" என்று உபநிடத வாக்கியம் போல்.

12 பங்களாவிலிருந்து குழாய் மூலம் பள்ளிக்குத் தண்ணீர் வரும். காலை 6-9 மணிவரை விடப் படுவது எங்கள் வீட்டிற்குப் பயன். 9-10க்குள் முத்துசாமி எல்லா வகுப்பறையிலுள்ள பானைகளையும் நிரப்புதல் வேண்டும். மிக்க சிரமமான வேலை இது. பகல் 1-2 மணிவரை விடப்படும். இது மாணவர்கட்கு உணவு உண்பதற்கு வசதியாக இருந்தது. இவர் தண்ணீரில் காட்டிய சிக்கனம் இன்றளவும் ஒரே வாளி தண்ணீரில் குளிக்கும் பழக்கத்தை என்னிடம் ஏற்படுத்தி விட்டது

(3) பள்ளியில் தங்கியிருத்தலினாலே இரவு பகல் எல்லா நேரங்களிலும் பள்ளிக்கு உழைக்க முடிகிறது. இதை எண்ணியாவது வீட்டு வாடகை வாங்கும் ரூ. 8-ஐ வாங்காமல் நிறுத்தி இருக்கலாம்.