பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 நீங்காத நினைவுகள்

ஆர்க்காடு மாவட்டத்தில் கடலூர் பக்கம் என்னையும் துணையாக இட்டுச் சென்றார். அப்போது இருப்பூர்தியில் இடைநிலை வகுப்பு (Intermediato Class) என்று ஒன்று இருந்தது இஃது இரண்டாம் வகுப்புக் கீழ், மூன்றாம் வகுப்புக்குமேல். (அப்பொழுது நடைமுறையில் இருந்தவை 4 வகுப்புகள் தமக்கு இடைநிலை வகுப்புக்கும் எனக்கு மூன்றாம் வகுப்பிற்கும் பயணச் சீட்டுகள் வாங்கும்படி பணிப்பார். கடலூரில் "பீம விலாஸ்" விடுதியில் தங்கல், ஒருவர் தங்கும் அறைக்கு வாடகை 1-8-0. ஒருவேளை உணவு 0-4-0: சிற்றுண்டி 0-2-0க்கு மேல் போகாது. எனக்குத் தாழ்வாரத்தில் படுக்கை. திருமணத் தரகர்களைக் கொண்டு வலை வீசப்பட்டது. நாராயணசாமி ரெட்டியார் என்பவர் ஒரு தரகர். அவர் கேட்டார் : “கழுத்துக்கு வைர அட்டிகை. இடுப்புக்கு வைரம் பதித்த ஒட்டியாணம், காது மூக்கு அணிகள் தொங்கல், மாட்டல் உட்பட) வைரம் பதித்தவை - இவை மணப் பெண்ணுக்குப் போட்டு ஓர் இலட்சம் ரொக்கம், பத்து ஏக்கர் நிலம் முடியுமா?" என்று. இவர் "பி.ஏ. படித்த பெண் இவையெல்லாம் போட்டுக் கொள்ள மாட்டாளே” என்றார். "அது தெரியும்; இப்படியெல்லாம் பிரித்துப் பேசினால்தான் தொகை குறைவதுபோல் தெரியும்" என்றார். சின்னத்துரையை சற்றுத் தயங்கினார். "இத்தகைய பெண்கள் தடுக்கி விழுந்தால் இப்பக்கமே கிடைக்கும். இதற்குத் திருச்சிக்கு வர வேண்டுமா, என்ன?" என்று சொன்னார். திருமணச் சந்தை நிலை விவரம் துரைக்கு நன்கு புரிந்தது."

நெல்லிக்குப்பத்தில் சதாசிவ ரெட்டியார் என்பவர் ஒரு பெரும்புள்ளி; அவருக்குத் தம்பி ஒருவர் உண்டு. B.Sc.(Hons) படித்துப் பட்டம் பெற்றவர். அப்பையனைக் குறி வைத்திருந்தார். சதாசிவரெட்டியார் விருந்து கொடுத்தார். கார் அனுப்பினார் விருந்து உண்ட பிறகு திருமணப் பேச்சை எடுத்தார் துரை "என் தம்பி கேரளாவில் ஒரு சிறியன் கிறித்தவப் பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டுவிட்டார்: மனத் தாங்கலால் வீட்டிற்கும் வருவதில்லை" என்று போட்ட போடு துரைக்கு அதிர்ச்சியைத் தந்திருக்க வேண்டும். பின்னர் தென்னார்க்காட்டு ரெட்டியார்களின் சம்பந்தமே வேண்டா என்று கைவிட்டார்.