பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 10 நீங்காத நினைவுகள்

விவரங்களை எடுத்துரைத்து இடவசதிகள் முதலியவற்றைப் பார்த்து விட்டுத் திரும்பினேன் குடிமைப் பயிற்சி முகாம் மிகச் சிறப்பாக நடைபெற்றது"

மூன்றாம் நாள் காலை சிற்றுண்டி முடிந்ததும் சுமார் மூன்று கல் தொலைவிலுள்ள "புளியஞ் சோலையில்" (கொல்லிமலை அடிவாரத்தில் உள்ளது முகாம் அமைக்கப்பெற்றது. இந்த இடம் முகாமிற்கும் மகிழ்ச்சிச் செலவுக்கும் பொருத்தமான அற்புதமான சூழ்நிலையில் அமைந்துள்ளது.

இந்த இடத்தைப் பற்றிச் சில சொற்கள் வானளாவும் உயர்ந்த மரங்களால் சூழப்பெற்றது. இங்குச் சென்றவுடனேயே கம்பன் காட்டும் பஞ்சவடிச் சூழ்நிலை நமது நினைவிற்கு வரும்.

ஓங்குமரன் ஓங்கிமலை

ஒங்குமணல் ஓங்கிப் பூங்குலை குளாவு குளிர்

சோலைபுடை விம்மித் தூங்குதிரை யாறுதழ்

குழலதுஓர் குன்று' என்பது கம்பன் சித்திரித்துக் காட்டும் சொல்லோவியம். மணலுக்குப் பதிலாக சிறியனவுமான குண்டுக்கற்கள்தான் நிறைந்துள்ளன. மழைக்காலத்தில் வெள்ளத்தால் உருண்டோடி வந்தவை இவை. உருண்டு உருண்டு தேய்ந்து வழவழுப்பான மேனியைக் கொண்டவை. இவற்றின் அடியில் ஊற்றுநீர் கசிந்து ஓடிக் கொண்டிருக்கும். இந்நீரைத் தேக்கி அண்மையிலுள்ள நிலங்கட்குப் பாய்ச்சுவார்கள் குண்டுக்கற்களின்மீது ஆயிரக்கணக்கானவர்கள் கூடலாம். மாநாடு கூட நடத்தலாம் இலக்கிய மாநாட்டிற்கு இயற்கைச் சூழல் அமைந்த இதைப் போன்ற மற்றோர் இடத்தைக் காண்டல் அரிது பகலவன் கதிர்கள் புகமுடியாதவண்ணம் மரங்கள் அடர்ந்து

3. கம்பரா. ஆரணி, அகத்திய - 57