பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 நீங்காத நினைவுகள்

"கண்டு மிகவும் களிப்புடனே நானவனை ஆளாகக் கொண்டுவிட்டேன்; அன்றுமுதற் கொண்டு நாளாக நாளாக நம்மிடத்தே கண்ணனுக்குப் பற்று மிகுந்துவரல் பார்க்கின்றேன்; கண்ணனால் பெற்றுவரும் நன்மையெலாம். பேசி முடியாது; கண்ணனை இமையிரண்டும் காப்பதுபோல் என் (பள்ளி) வண்ணமுறக் காக்கின்றான் வாய்முணுத்தல் கண்டறியேன்.

S LS CS 0S SSS 0 SSS CSSS C S S S S S S S S S S S 0S S S0 S 0S S | இங்கிவனை நான் பெற்றேன் என்னதவம்

செய்துவிட்டேன்"

என்று சொல்வது முற்றிலும் பொருந்தும் ஆறாவது அடியில் "குடும்பம்" என்பதற்குப் பதிலாகப் "பள்ளி" என்று போடப் பெற்றது. "குடும்பம்" என்றாலும் பொருந்தும். அக்காலத்தில் பள்ளியையே என் குடும்பம் என்று பாவித்து உழைத்ததை ஊர்ப் பெருமக்கள் நன்கு அறிவர்.

நினைவு - 4 : "திருவருட் செல்வர்கள்" என்ற வரிசையில் சைவ சமய குரவர்கள் நால்வரைப் பற்றியும் நூல்கள் எழுதத் திட்டமிட்டிருந்தேன் "தம்பிரான் தோழர்" (1985) ஏற்கெனவே வெளிவந்துவிட்டது. 1986-இல் "நாவுக்கரசர்" ஜூன் 1986) "ஞான சம்பந்தர்" (நவம்பர் - 1986) இரண்டு நூல்கள் வெளிவந்தன. முன்னதை என் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய திரு. நாக ரெட்டியாருக்கு

செந்தமிழ்க் கன்பர்; பண்பினில் உயர்ந்தோர்:

திருந்தும்எம் குலக்கதி ரானோர்; சிந்தனை வளர்க்கும் விருந்தருள் அறிஞர்;

சீரிய வள்ளலார்க் கன்பர்; நந்தலில் லாத நாமகள் பொலிய

நங்கலைக் கோவிலைப் படைத்தோர்;

4 பா.க : கண்ணன் பாட்டு - கண்ணன் என் சேவகன் (40-56)