பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ். ஆர். நாகரெட்டியார் 115

விழா எடுத்தார் விழா முதுபெரும் புலவர் செவந்தாம்பட்டி திரு. பெ. இராமாநுச ரெட்டியார் தலைமையில் நடைபெற்றது. விழாவில் திருச்சியிலிருந்து வந்த இரண்டு அறிஞர்கள் பேசினார்கள். இவர்கள் பேச்சு நூல்களைத் திறனாய்வு செய்யும் போக்கில் அமைந்தது.

பெருவளநல்லூர் க பதுமநாபன் இராஜா சிதம்பர ரெட்டியார் குணநலன்களைப்பற்றியும் அவர் பல்வேறு நிலைகளில் - பொறுப்புகளில் ஆற்றிய பெருந்தொண்டைப்பற்றியும் விரிவாக விளக்கினார். செந்தாரப்பட்டி நாராயணசாமி ரெட்டியார் திரு. நாகரெட்டியார் ஆற்றிய தொண்டுகளைப் பற்றி விரிவாக விளக்கிப் பேசினார்.

ஏற்புரை வழங்கிய இரு பெரியார்களும் அவர்களுடன் அடியேனது தொடர்புபற்றிப் பல நிகழ்ச்சிகளுடன் பொருந்திப் பேசி அனைவரையும் மகிழ்வித்தனர். இந்த விழாவிற்கு இப்பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்ற ச. கணபதி ரெட்டியார், ஒன்றிரண்டு ஆண்டுகள் பணியாற்றிய P மாதுர்பூதம், உடற்பயிற்சி ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற மாணிக்கம் வந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

விழாநாயகர்களில் திரு. பி.பி.கே. இராசாசிதம்பரம் இன்றும் நம்மிடையே வாழ்ந்து வருகின்றார். திரு. எஸ்.ஆர். நாகரெட்டியார் திருநாடு அலங்கரித்து விட்டார். விழா நடைபெற்றுப் பத்துமாதங்களில் சிவப்பேறு அடைந்ததை நினைத்து வருந்தாமல் இருக்க முடியவில்லை

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை யுடைத்தில் வுலகு"

திரு நாகரெட்டியார் தோற்றம் 12.7.1916 முக்தி : 1.11.1987

5 குறள் - 338