பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 நீங்காத நினைவுகள்

ஒர் இடத்தை அன்பர்கள் உதவியால் ஏற்பாடு செய்து 700க்கு மேற்பட்ட ஆசிரியர்கட்குக் காலையில் சிற்றுண்டி காஃபி, மதிய உணவு, மாலையில் சிற்றுண்டி, காஃபிக்குச் சமையல் ஆட்களை நியமித்து வசதிகள் செய்யப் பெற்றன அவசரமாக அங்குமிங்கும் சென்று வருவதற்கு ஒரு வாடகைக் காரையும் தயார் நிலையில் வைத்திருந்தோம். காலை எட்டு மணியிலிருந்து மாநாட்டிற்கு எழுந்தருளி அரைமணிநேரம் இருக்குமாறு கல்வியமைச்சரைக் கேட்க முயன்றேன். பிற்பகல் 2 மணிவரை அவரைப் பார்க்கவே அநுமதி தரமறுத்தனர். எங்கும் கதர் உடை, கதர் குல்லாய் அணிந்த கூட்டம் திரண்டிருந்தது. அக் காலத்தில் திருச்சி மாவட்டக் கல்வி அதிகாரியாக இருந்த திரு. அப்பர் சுந்தர முதலியாரும் அமைச்சரைப் பார்க்கத் திண்டாடிக் கொண்டிருந்ததைக் கண்டேன். புதிதாக விடுதலை பெற்ற நாடாதலால் காங்கிரஸ்காரர்கள் சீதையைக் கண்டறிந்த அநுமன் வந்த பிறகு வானரங்கள் மதுவனத்தில் புகுந்து அட்டகாசம் செய்ததைப்போல் இவர்கள் ஆணவம் தலைக்கேறியவர்கள்போல் காணப்பெற்றனர். பணிவோ, பண்பாடோ அவர்களிடம் காணப்பெறவில்லை. ஆசிரியர்கள் பதினெட்டு ரூபாய்க்கும் இருபது ரூபாய்க்கும் மாத ஊதியத்தில் பணியாற்றுபவர்கள்தாமே என்று எண்ணியது அவர்கள் பேச்சில் தொனித்தது.

எல்லோரும் ஒர்குலம் எல்லோரும் ஓரினம்

எல்லோரும் இந்தியா மக்கள் எல்லோரும் ஒர்நிறை எல்லோரும் ஒர்விலை

எல்லோரும் இந்நாட்டு மன்னர் - நாம் எல்லோரும் இந்நாட்டு மன்னர் - ஆம் எல்லோரும் இந்நாட்டு மன்னர்’ என்ற பாடலில் "எல்லோரும் இந்நாட்டு மன்னர்" என்ற அடியின் கருத்தைத் "தாம் மட்டிலுந்தான்" என்று கருதிக் கொண்டிருந்த

& பாக பாரத சமுதாயம் - 4