பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 நீங்காத நினைவுகள்

"அவினாசிலிங்கம் வாழ்க" என்று முழக்கமிட்டு ஆசிரியர் மாநாடு அப்பெருமகனாரை வழியமைத்து வைத்தது.

இவர் கல்வியமைச்சராக இருந்த காலத்தில் ஓராண்டுக் காலமே இவர் கல்வியுலகில் மேற்கொண்ட சீர்திருத்தங்கள் பிற்காலத்தில் செய்யப்பெற்ற ஐந்தாண்டுத் திருத்தங்களைவிட அதிகமே உயர் நிலைப்பள்ளிகளில் முதற்படிவம் முதல் ஆறு படிவம் வரை மாணவர் அறிவு நிலைக்கேற்ப 50, 75, 100 குறள்கள் வீதம் தேர்ந்தெடுக்கப் பெற்றவற்றைக் கட்டாயமாக அறிமுகம் செய்து வைத்தார். மாணவர்கள் ஒழுக்க சீலர்களாக உருவாக்கப் ட்ெறவேண்டும் என்ற நன்னோக்கத்துடன் குடிமைப் பயிற்சி (CitizenshipTraining) என்ற ஒரு திட்டத்தை உயர்நிலைப் பள்ளிகளில் நடைமுறைப் படுத்தினார். உயர்நிலைப் பள்ளி நிலையில் அறிவியல் பாடங்களைக் கற்பிப்பதற்கு எளிதாக இருக்கும் பொருட்டும். அறிவியல் பாடநூல்கள் எழுதுவோருக்குத் துணையாக இருக்கும் பொருட்டும் எல்லாத் துறை அறிவியலுக்கும் கலைச்சொற் பட்டியல்களை வல்லுநர்களைக் கொண்டு உருவாக்கினார்.

நினைவு - 2 : தமிழ் இலக்கியங்களிலிருந்து சில பாடல்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை அநுபவிக்கும் பாங்கில் அமைந்த 25 கட்டுரைகள் கொண்ட "கவிஞன் உள்ளம்" என்ற பெயரில் ஒரு நூலாக வெளியிட்டேன் (சனவரி 1949) இதுதான் என் முதல் வெளியிடு கன்னி முயற்சி". இந்த நூலுக்குத் திரு தி.சு. அவினாசிலிங்கம் (கல்வியமைச்சர் அவர்களிடமிருந்து அணிந்துரை பெற எண்ணினேன். என் வீரவழிபாட்டுக்குரியவரல்லவா? அணிந்துரை வாங்குவதற்கென்றே துறையூரிலிருந்து சென்னை வந்தேன். அப்போது அமைச்சர் சென்னை சாந்தோம் பகுதியில் வசித்து வந்தார். நூலின் ஒரு படியை முன்னரே அவருக்கு அஞ்சல் வழி அனுப்பியிருந்தேன். நேராக அவர் மனமுவந்து சிறியேனை இன்முகத்துடன் வரவேற்றார். பின்னர், "மிஸ்டர் ரெட்டியார், தங்கள் நூலுக்கு அணிந்துரை தர விரும்பினேன். நூலைப் படித்துப் பார்த்ததில் அது காதற்கட்டுரைகளைக் கொண்டிருப்பதைக்