பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி.சு. அவினாசிலிங்கம் 121

கண்டேன். என் நிலைக்கும் நான் மேற் கொண்டுள்ள இராமகிருஷ்ண வித்தியாலயப் பணிக்கும் இவை ஒவ்வாதவை. இந்நூலுக்கு அணிந்துரை வழங்க முடியாமைக்கு வருந்துகின்றேன். வேறொரு நூலுக்கு அவசியம் தருவேன்" என்று கூறி நூலை என்னிடம் திருப்பித்தந்து விட்டார். நானும் அவரிடம் நகைச்சுவையாக,

"மாணியாம் வேடம் தாங்கி

மலரயற் கறிவு மாண்டோர்

ஆணியாய் உலகுக் கெல்லாம்

அறம்பொருள் நிரப்பும் அண்ணல்"

என்று கம்பநாடனால் புகழப் பெற்ற அநுமனைப்பற்றி ஒரு நூல் எழுதத் திட்டமிட்டுள்ளேன். அதற்குப் பெறுவேன்." என்று கூறி விடைபெற்றுத் திரும்பினேன்.”

நினைவு 3 : காரைக்குடி வாழ்வில் (1950 - 60 ஆறு ஆண்டுகள் அரிதின் முயன்று தமிழ்ப் பயிற்றுமுறை என்ற அரியதொரு பெருநூலை எழுதி முடித்தேன். ஆசிரியப் பயிற்சி பெறும் மாணாக்கர்கட்குப் பயிற்றிக் கொண்டே நூல் எழுதப் பெற்றமையின் நூல் அநுபவநூலாக அமைந்துள்ளது" இந்த நூலுக்கு முன்னாள் கல்வியமைச்சர் திரு. தி.சு. அவினாசிலிங்கம் அவர்களிடம் அணிந்துரை பெற எண்ணினேன். நூலின் படியொன்றினை அவருக்கு அனுப்பி முன்னறிவிப்புடன் கோவை - பெரிய நாய்க்கன் பாளையம் இராமகிருஷ்ண வித்தியாலயத்திற்குச் சென்றேன்.

4. கம்ப சுந்தர-கடல்தாவு - 26

அப்படிப்பட்ட நூலை இதுகாறும் 43 ஆண்டுகளாக எழுதவில்லை. எப்படியும் எழுதுவேன். அணிந்துரை பெறுவதற்கு "அய்யா"தான் இல்லை.

6. பலர் விரும்பிப் படிக்கின்றனர். பாராட்டுகின்றனர். இப்போது இதன்

நான்காம் பதிப்பு வெளிவரும் நிலையில் உள்ளது