பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி.சு. அவினாசிலிங்கம் 123

கல்வித் துறையில் பாடபோதனையின் தரம் உயரவேண்டும் என்பது அனைவருடைய விருப்பம் நமது உயர்நிலைப் பள்ளிகளில் பாடபோதனை தமிழில் அமைந்திருக்கின்றது. ஆனால் இந்தப் பாடங்களைப் போதிக்கும் ஆசிரியர்கட்குப் பயிற்சியும் பாடமும் ஆங்கிலத்தில் அளிக்கப் பெறுகின்றன. பின்னர் அவர்கள் பள்ளியில் மேற்கொள்ள இருக்கும் பணிகளில் அவர்கள் பெற்ற அறிவும் பயிற்சியும் முற்றிலும் பயன்படாமல் போகின்றன. எனவே, முதலில் ஆசிரியர்க் கல்லூரிகளில் பாடங்கள் தமிழில் சொல்லித் தரப் பெற வேண்டியது மிகவும் அவசியம். ... இந்தக் குறையைத் தீர்ப்பதற்கு திரு. ந. சுப்புரெட்டியார் முன்வந்திருப்பது பாராட்டத்தக்கது.

அவர் எழுதியிருக்கும் "தமிழ்ப் பயிற்றும் முறை" பெரிய அளவு நூலாக அமைந்திருக்கின்றது. தாய்மொழிப் பயிற்சியைத் தவிர அத்துடன் தொடர்பாக இருக்க வேண்டிய நவீன முறைகள் பற்றிய பல செய்திகள் இந்நூலில் சேர்க்கப் பெற்றுள்ளன. தாய் மொழி மூலம் கல்வி புகட்டுவதுதான் குறைந்த காலத்தில் அதிக அறிவு பெறுவதற்கேற்ற வழி என்பது உலக முழுவதிலுமுள்ள அறிஞர்களின் அநுபவம். ..

இன்றில்லையானால், நாளை அல்லது ஒன்றிரண்டு அல்லது ஐந்தாண்டுகளில் படிப்படியாக தமிழ் போதனா மொழியாவது உறுதி.

திரு. ந. சுப்பு ரெட்டியார் மிகுந்த சிரமத்துடனும், சிரத்தையுடனும், பக்தியுடனும் இப்பணியைச் செய்திருக்கின்றார்

அவர் பணி அனைவருக்கும் பயன்படுவதாகுக அவர்

மேற்கொண்டிருக்கும் முயற்சிகளில் ஆண்டவன் துணை நிற்பானாக.

- தி.சு. அவினாசிலிங்கம் 30,657