பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 நீங்காத நினைவுகள்

மாணவர் விடுதிக்கு ஓர் ஆள் மூலம் என்னை அனுப்பி உணவு கொள்ளச் செய்தார். திரும்பியதும் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி முதல்வர், உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர், ஆசிரியர் பயிற்சிப் பள்ளித் தலைமை ஆசிரியர் இவர்கள் தயாராக வந்திருந்தனர். "அன்பர்களே. இன்று "ரெட்டியார் நாள் பிற்பகல் வகுப்புகள் தொடங்குவதை நிறுத்திவிட்டு உங்கள் பள்ளியில் முக்கால் மணி நேரம் கூட்டம் அமைத்து இவரைப் பேசச் செய்து மாலை ஆறுமணிக்குக் கோவை செல்லும் இருப்பூர்தியில் ஏற்றி விடுங்கள்" என்று பணித்தார். மூன்று நிறுவனங்களிலும் அரை மணிநேரம் வீதம் பேசினேன். மாலை ஆறு மணிக்குக் கோவை செல்லும் இருப்பூர்தியில் ஏறிக் கோவை வந்து, மதுரை செல்லும் இருப்பூர்தியில் ஏறித் திண்டுக்கல்லில் இறங்கிப் பேருந்து மூலம் காரைக்குடிக்குத் திரும்பினேன் அன்றே அணிந்துரைக்கு நகல் எடுத்து S.R. சுப்பிரமணியப் பிள்ளை நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தேன். நூலும் ஆக்டோபர் முதல் தேதி 1957) வெளிவந்தது.

நினைவு - 4 : 1958 - என நினைக்கின்றேன். பல்லாண்டுகளாக அணுவைப்பற்றி ஆய்ந்த கருத்துகளைத் தொகுத்து "அணுவின் ஆக்கம்" என்ற அரியநூலை எழுதி முடித்தேன் இந்த நூல் எஸ்.ஆர். சுப்பிரமணியப்பிள்ளை வெளியீடு அணுவினை ஆக்கத் துறைகளில் பயன்படுத்தும் முறைகளை விளக்க எழுந்தது இந்நூல். அணுபற்றிய பல,ஆங்கில நூல்களைப் படிக்க வேண்டி நேரிட்டது. அமெரிக்க செய்தித் துறையைச் சார்ந்த நூலகத்தார் எனக்குப் பெருந்துணை செய்தார்கள். நூலும் பதினாறு இயல்களில் அற்புதமாக அமைந்தது இந்நூலை திரு. சி. சுப்பிரமணியம் அக்காலத்தில் தமிழக அரசின் கல்வியமைச்சர் அவர்களின் அணிந்துரை அணி செய்கின்றது. இந்த நூலை நமது அய்யா அவர்கட்கு.

7 அணிந்துரை அற்புதமாக அமைந்தது. "தமிழ் பயிற்றும் முறை" மணிவாசகர் பதிப்பகம், சிதம்பரம் - 608 001) என்ற நூலில் கண்டு

மகிழத் தக்கது)