பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 நீங்காத நினைவுகள்

அய்யா அவர்களின் வாழ்த்தின் கனம் இன்றளவும் எனக்குப் பதிய உற்சாகத்தை ஊட்டிக் கொண்டுள்ளது.

நினைவு - 6 : திருப்பதியில் 1977 அக்டோபரில் ஒய்வு பெற்றேன். ஆனால் மூன்று மாத காலம் திருப்பதியிலேயே தங்கியிருந்தேன். என் இளைய மகன் டாக்டர் இராமகிருஷ்ணன் திருமணமாகி ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் எம்.டி (பொது மருத்துவம் படித்துக் கொண்டிருந்தான். என் மூத்த மகன் திருப்பதியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணிபுரிந்து கொண்டிருந்தான். அவனைச் சென்னைக்கு மாற்றிக் கொள்ள முயன்று கொண்டிருந்தேன். சனவரி முடிய பல்கலைக் கழகக் குடியிருப்பில் தங்கிக் கொள்ள அநுமதி இருந்தது. அதற்குமேல் சென்னையில் குடியேறத் திட்டம் இருந்தது. சென்னையில் வாடகை வீடு பார்க்கும் வேலையும் இருந்தது. இதனால் பலமுறை சென்னைக்கு வரும் வாய்ப்புகள் இருந்தன. தங்கும் இடம் எஸ்.ஆர். சுப்பிரமணிய பிள்ளை பதிப்பகம், 6, பிலிப்ஸ் தெரு, சென்னை - 600 001 தான். அருகில் நல்ல உணவு விடுதிகள் இருந்தமையினாலும் நினைத்தவுடன் பல்வேறு இடங்கட்குப் போய்வர பேருந்து, இருப்பூர்தி வசதிகள் இருந்தமையினாலும் இந்த இடமே 1964 ஆண்டு முதல் தற்காலிகத் தங்குமிடமாக வைத்துக் கொண்டிருந்தேன். பதிப்பக மேலாளர் கந்தனடிமை திரு. எஸ்.பி. சண்முகம் பிள்ளை அவர்களும் ("கந்தனடிமை" அடியேன் அவருக்கு வழங்கிய விருது” பக்குவ ஜீவியாக இருந்தமையால் என் மனமொத்த தோழராக இருந்து வந்தார்"

10 காலையிலும் மாலையிலும் சென்னை கந்தகோட்டம் சென்று கந்தனை

வழிபடத் தவறுவதில்லை இவர்.

11 1941-50 வரை துறையூரில் பணியாற்றிய காலத்திலும், 1950-60 வரை காரைக்குடியில் பணியாற்றிய காலத்திலும் பன்மொழிப் புலவர் திருவேங்கடராஜூலு ரெட்டியார் மயிலையில் தங்கியிருந்த இடங்களாகிய 12 நாட்டு கப்பராய முதலித்தெரு 13, வடக்கூர் செல்வ விநாயகர் தெரு. 35, இலக்கியப்ப முதலி தெரு ஆகிய இடங்களில் தங்குவது வழக்கம். வெறும் இரும்பாக இருந்த அடியேனை தமிழ்க் காந்தமாக மாற்றிய பெரிய தமிழ்க் காந்தம் இந்தப் பெருமகனார்.