பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 நீங்காத நினைவுகள்

வேண்டத்தக்க தறிவோர் நீ;

வேண்ட முழுதும் தருவோய்நீ:

வேண்டி என்னைப் பணிகொண்டாய் வேண்டி நீயா தருள் செய்தாய்;

யானும் அதுவே வேண்டினல்லால் வேண்டும் பரிசொன் றுண்டென்னில்

அதுவும் உன்றன் விருப்பன்றே"

என்ற மணிவாசகப் பெருமானின் மணிவாக்கு நெஞ்சில் எழுகின்றது.

நினைவு 7 : பணியிலிருந்த போது (1978) ஒரு சமயம் - கோடை விடுமுறையில் என நினைக்கின்றேன். கோவையில் ஒரு வைணவ சங்க ஆண்டு விழாவில் பேச வாய்ப்பு வந்தது. தோழி - தாய் - மகள்" என்பது பற்றிப் பேசியதாக நினைவு. ஆழ்வார் பெருமக்கள் - குறிப்பாக நம்மாழ்வார் - தமிழர்களின் அகப்பொருள் தத்துவத்தை மெய்ப்பொருளியில் கையாண்ட பாங்கைப்பற்றி இம்மூன்று நிலைபற்றிய பாசுரங்களும் விளக்குகின்றன என்பதைத் தெளிவாக எடுத்துக் கூறிப் பேசினேன். பேச்சு முடிந்த மறுநாள் அய்யாவைப் பார்ப்பதற்காக முன்னறிவிப்புடன் வித்தியாலயம் சென்றேன். மிகவும் அன்பாக வரவேற்று உபசரித்தார். கலைக்களஞ்சியம் - இரண்டாவது பதிப்பைப் பற்றித்தான் அதிகமாக உரையாடினோம். ஒரு வெள்ளை வேட்டி சாமியார் உபசரித்த பாங்கு ஓர் இல்லத்தரசி உபசரிக்கும் பாங்கையும் விஞ்சும்படி இருந்தது

12 திருவா. குழைத்த பத்து - 6

13 இஃது ஆசாரிய ஹிருதயத்திலுள்ள ஒரு சூத்திரம் - 133

இதே தலைப்பில் வந்தவாசி வைணவ மாநாட்டிலும் (1993 - ஜூலை பேசினேன் அந்தப் பொழிவை அப்படியே கட்டுரை வடிவமாக்கியுள்ளேன். சமயம் வாய்க்கும் போது கட்டுரைத் தொகுப்பு நூல் ஒன்றில் இடம்பெறும்.