பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1

குணம் K.N. நல்லப்ப ரெட்டியார்

நான் பிறந்த ஊர் கோட்டாத்தூர் முசிறி வட்டம் இப்போது துறையூர் வட்டம். சாதாரணமாக எல்லாச் சிற்றுார்களில் உள்ளதைப் போலவே இவ்வூரிலும் ஊர்ப்பெயருடன் வீட்டுப் பெயர்கள் இணைந்தே வழங்குகின்றன. அரும்பாவூரார் வீடு, வேப்பூரார் வீடு, பரளியார் வீடு, கணவாயார் வீடு, சிறுகுடியார் வீடு, சிறுகனுரார் வீடு. ஒக்கரையார் வீடு என்று வழங்குகின்றன. என்றோ ஒரு காலத்தில் - நினைத்துப் பார்க்க முடியாத காலத்தில் அரும்பாவூர், வேப்பூர், பரளி, கணவாய், சிறுகுடி, சிறுகனுர், ஒக்கரை என்ற ஊர்களிலிருந்து இவர்களின் மூதாதையர் ஒருவர் இந்த ஊருக்குக் குடி வந்திருத்தல் வேண்டும். இப்படிப் பேர் வழங்கும் அரும்பாவூரார் குடும்பத்தில் மூவர் உடன் பிறந்தவர்கள். அவர்களுள் பெரியவ்ர் குடும்பத்தின் தலைவர் குணம் நல்லப்ப ரெட்டியார். அவர்தம் முதல் மனைவி வழியாக வந்தவர் K.N. நல்லப்பரெட்டியார். இவர் 25-12-1908 இல் பிறந்தார். அடியேனை விட சுமார் எட்டு வயது மூத்தவர். நடுவலவர் குடும்பத்தில் பிறந்தவர் சிதம்பரம் சின்னவர் குடும்பத்தில் பிறந்தவர் நல்லப்பரெட்டியார். இம்மூவரும் செல்வச் செழிப்புள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்தாம். எல்லோருமே சிற்றுரில் கிடைத்த ஐந்து வகுப்புக் கல்வியை முடித்துக் கொண்டனர். ஒரு குடும்பத்தினருக்காவது வெளியூர் சென்று உயர் கல்விபெற வேண்டும் என்ற உந்தலே இல்லை. அக்காலத்தில் (1920களில் நிலக்கிழார்களின் மனப்பான்மை இதுதான். ஆனால் வறுமையையே குலதனமாகக் கொண்ட நான் அத்திபூத்தமாதிரி வெளியூர் சென்று உயர்நிலை, கல்லூரிக் கல்வி பெற்றது என் பூர்வ புண்ணியத்தால் வந்த இறையருள் என்றுதான் கருதுகின்றேன்.