பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ.து. சுந்தர வடிவேலு 137

பெருமானின் அவதாரமே காரணம் என்று சொல்லுவது எள்ளளவும் மிகை படக் கூறுவதாகாது.

சீடர்கள் : தந்தை பெரியாருக்கு எண்ணற்ற சீடர்கள் - கற்றவர்கள், கல்லாதவர்கள், பொதுமக்கள் என்ற வகையினர். இவர்கள். இருபதாம் நூற்றாண்டடில் சமூக அமைப்பில் பல மாற்றங்கட்குத் தந்தை பெரியாரும், தேசத் தந்தை மகாத்மா காந்தியும் ஆவார்கள் என்று கூறுவதில் கருத்து வேற்றுமை இருக்க முடியாது. இவர்களின் தொண்டை மதிப்பிட்டுக் கூறும் பாவேந்தரின் மொன்மொழிகள் ஈண்டுச் சிந்திக்கத் தக்கவை.

பெரியாரைப் பற்றியது : மக்கள் நிகர்எனும் மாத்தமிழ் நாட்டில் மக்களில் வேற்றுமை வாய்க்கவும் ஆனதே! உயர்ந்தவன் நான்என் றுரைத்தனன் பார்ப்பான் அயர்ந்தனன் நான்என் றுரைத்தனன் தமிழன் இப்படி ஒருநிலை காணுகின் றோமே? இப்படி எங்குண் டிந்த உலகில்?

இழிநிலை நோக்கி இறங்குந் தோறும் பழிநீக் கிடஎவன் பறந்தான் இதுவரை?

இதுவரை எந்தத் தமிழன் இதற்கெல்லாம் பரிந்துபோ ராடினான்? எண்ணிப் பார்ப்பீர் தமிழ்மனம் தவிடுபொடி ஆகையில் வாழாது வாழ்ந்தவன் வடுசுமந்து சாகையில் "ஆ"என்று துள்ளி மார்பு தட்டிச் "சாவொன்று வாழ்வொன்று பார்ப்பேன்! என்று பார்ப்பனக் கோட்டையை நோக்கியே அருஞ்செயல் செய்வார் அல்லால் பெரியார் எவர்?நம் பெரியார் வாழ்கவே

2 வேங்கையே எழுக - பக். 48-49