பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெது. சுந்தர வடிவேலு 139

இத்தகைய பெரியார் இருவர்பாலும் மிக்க ஈடுபாடு கொண்டார் சுந்தரவடிவேலும் ஆனால் அணுக்கத் தொண்டராகத் திகழ்ந்தார் தந்தை பெரியாரிடம்.

நடுத்தர வகுப்பு மேட்டுக்குடியில் பிறந்தவர் செங்கற்பட்டு மாவட்டம் நெய்யாடிவாக்கத்தில் அக்டோபர் 12 1912இல் பிறந்த குடியில் அவருக்கு ஈடுபாடு இல்லை. சாதியற்ற பேருலகில் வாழவிரும்பியது அவரது பரந்த திருவுள்ளம். தம் சாதியைச் சார்ந்த பெண்ணைக்கூட திருமணம் செய்து கொள்ள விரும்பிற்றிலது அத்திருவுள்ளம்.

அடியேனுக்கு இளமையில் நல்லாசிரியர்கள் அமைந்தது போல் இவருக்கும் நல்லாசிரியர்கள் அமைந்தமையால் கல்வியில் சிறப்பாகத் திகழ்ந்ததுபோல் பண்பாடு, ஒழுக்கம், யாரிடமும் சகோதர மனப்பான்மை, எழை எளியவர்கள்பால் பாச-நேசம் முதலியவையும் இவர் உள்ளத்தில் ஆழப்பதிந்தமையால் இவர் பிற்காலத்தில் வகித்த பதவிகலெல்லாம் இவரை அவை நேர்மையில் கொண்டு செலுத்தின. இவர் வகித்தமையால் பதவிகட்கும் புகழும் ஏற்பட்டது.

இடைநிலை வகுப்பில் கணிதம் இயற்பியல், வேதியியல் விருப்பப் பாடங்களாக எடுத்துப் படித்து முதல் வகுப்பில் தேர்ச்சியடைந்தாலும், பொறியியல் துறைக்குப் போக இவர்தம் உள்ளம் விரும்பிற்றிலது. பொருளியல் பி.ஏ. (சிறப்பு பட்டத்திற்காக இவர் மாநிலக் கல்லூரியில் இடம் பிடிக்கப் பட்டபாடும், விக்டோரியா உணவு விடுதியில் சேர்வதற்குப் பட்டபாடும் காவியத்தில் இடம்பெறத்தக்கவை 1939இல் B.A. (Hons) பட்டம் பெற்றார். ஏதோ ஓரளவு பிண்ணனி இருந்தமையால் பல இடர்ப்பாடுகளைத் தாண்டி வெற்றி பெற முடிந்தது.

வேலை தேடும் படலமும் காவியத்தில் இடம் பெற்றத் தக்கது. "தமிழ் நாடு" இதழில் உதவியாசிரியராக ரூ. 35'- மாத ஊதியத்தில் சில ஆண்டுகள் பணியாற்றினார் இதழின் பொருளாதார

5 3 ஆண்டு 10 திங்கள் 15 நாள் என்னை விட மூத்தவர்.