பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெது. சுந்தர வடிவேலு 141

நினைவு - 1 : 1941-50 வரை நான் தோற்றுவித்த துறையூர் ஜமீந்தார் உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிய காலம் 1945க்குப் பிறகு நாமக்கல் கழக உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றிய திரு. PR. சுப்பிரமணியத்தின் நட்பு கிடைத்தது. இவர் திருநெல்வேலி சைவப்பிள்ளைமார் குலத்தைச் சேர்ந்தவர். இவர் ஆத்தூர் கழக உயர்நிலைப் பள்ளியிலி: ருந்து மாற்றப்பட்டு நாமக்கல் பள்ளிக்கு வந்தவர். அக்காலத்தில் திரு. சுந்தரவடிவேலு சேலம் மாவட்டக் கல்வி அதிகாரியாகப் பணிபுரிந்து வந்தார். திரு. சுப்பிரமணியப் பிள்ளையும் நேர்மையாகவும் திறமையாகவும் பணியாற்றி வந்த உத்தமர் ஆகவே இருவரிடையே ஏற்பட்ட நட்பு முதிர்ந்து வளர்ந்தது.

அக்காலத்தில் அடியேனும் மனச்சான்றுடன் திறமையாகவும் நேர்மையாகவும் பணியாற்றுபவன் என்ற நற்பெயர் எடுத்தவன் இதனால் திரு. சுப்பிரமணியத்திடம் எற்பட்ட என் நட்பு இருநிலம் பிளக்க வேர் வீழ்த்தது. எனக்குத் திருச்சி மாவட்டக் கல்வியதிகாரி திரு. சாம்பசிவம் பிள்ளையின் நட்பு கிடைத்தது இறைவனது திருக்குறிப்பாகும். எங்கள் நட்பும் நன்கு வளர்ந்து உரமாயிற்று. நான் சாம்பசிவம் பிள்ளையின் திருக்குணங்களைப் பெருமையாகப் பேசும் போதெல்லாம் திரு. சுந்தர வடிவேலுவின் அருங்குணங்களைப் பெருமையுடன் எடுத்துக் கூறி மகிழ்வார் திரு. சுப்பிரமணியம். என்னையறியாமல் திரு சுந்தரவேலுவிடம் ஈடுபற்றேன்.

புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் நட்பாம் கிழமை தரும்' என்ற குறள்மணி அடிக்கடி நினைவில் எழும். நான் துறையூரி லிருந்த வரை திரு. சுந்தரவடிவேலுவை நேரில் சந்தித்துப் பேசும் - பழகும் வாய்ப்பினைப் பெறவில்லை.

நினைவு 2 : 1950-ஆம் ஆண்டு ஜூலை 5-ஆம் நாள் காரைக்குடி அழகப்பர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி அழைப்பின்

7 குறள் 785