பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ.து. சுந்தர வடிவேலு 145

கொற்றமார் கீரன் பாரதி தங்கிக்

குலவிய செந்தமிழ்த் தாயின்

பற்றுறு வயிற்றில் திருவோடு தங்கிப் பண்பொடு தோன்றிய செல்வர்;

கற்றவர்க் கினியர் சுந்தர வடிவேல்

கண்ணியர்க் குரியதிந் நூலே.

என்ற பாடல்மூலம் இந்தநூலை அன்புப் படையலாக்கி மகிழ்ந்தேன். இதுவும் கழக வெளியீடாக வந்து பல பதிப்புகளைக் கண்டு புகழ் பெற்றிலங்குகின்றது.

நினைவு - 4 : தேர்வுகளில் ஊழல் மலிந்த காலம் இது நான் பள்ளியில் படித்த காலத்திலேயே (1930-34) இந்த ஊழல் வாமனன் நிலையிலிருந்து படிப்படியாக வளர்ந்து இன்று திரிவிக்கிரமன் நிலைக்கு வளர்ந்துள்ளது. பணத்தாசை பிடித்த இன்றைய சமூகத்தில் பணத்தின் திருவிளையாடலால், விடைத்தாள்கள் திருத்துவோர், பல்கலைக்கழக அலுவலகத்தில் மதிப்பெண்களைப் பதிவோர் பேயாட்டம் ஆடுகின்றனர். தேர்வு மண்டபத்தில் நடைபெறும் தில்லுமுல்லுகளைச் சொல்லி முடியா, ஒரு கல்லூரியில் உண்டிப் பெட்டி வைத்திருந்ததாகவும், தேர்வு எழுதுவோர் அவரவர் தம் பொருளாதார நிலைக்கேற்பப் பணம் அதில் போடலாம் என்ற ஏற்பாடுகள் இருந்ததாகவும், மாணவர்கள் புத்தகங்கள் குறிப்பேடுகள் இவற்றை வைத்துக்கொண்டு பார்த்தெழுதலாம் என்றும், அன்றாடம் சேரும் தொகைகளைக் கல்லூரி முதல்வரும் தேர்வுமண்டப மேற்பார்வையாளர்களும் பகிர்ந்து கொள்ளுகின்றார்கள் என்றும் ஒரு வரலாற்றைக் கேட்டதுண்டு. இன்னும் ஒரு கொடுமையான செயலும் நடைபெறுவதாகவும் கேட்டதுண்டு. பிற்பகலில் நடைபெறும் தேர்வுக்குரிய விடையேடுகள் அஞ்சலில் சேராமல் நிறுத்தி வைக்கப் பெறும். ரூ. 500/= செலுத்துவோர் புதிய விடைத்தாளில் இரவில் சரியான விடைகள் எழுதி அந்த ஏட்டை முன்னர்ப் பகலில் மண்டபத்தில் எழுதிய விடையேட்டை நீக்கி அந்த இடத்தில் இதனைச் செருகும் ஏற்பாடும் இருப்பதாகவும் வரலாறு உண்டு

10