பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 நீங்காத நினைவுகள்

நினைவு - 1 : நான் கல்விக்காக வெளியூர் செல்லும் இரண்டு மூன்று ஆண்டுகட்கு முன்னர் பல்லாண்டுகட்கு முன்பிருந்தே மார்கழி மாதத்தில் அதிகாலையில் பஜனை மடத்திலி ருந்து (கிருஷ்ணன் கோவில் அதிகாலை 4 மணிமுதல் பஜனைக் குழு இறைவனை வழுத்திதக் கொண்டு ஹார்மோனியம், மிருதங்கம், தாளம், கஞ்சிரா இவற்றுடன் ஊரின் முக்கிய வீதிகளில் வலம் வருதல் வழக்கமாக இருந்து வந்தது. இந்தக் குழுவில் அரும்பாவூர் வீட்டுச் சகோதரர்கள் மூவரும் கலந்து கொண்டு பாடல்கள் பாடுவர். தாளங்கள் போடுவர். இரகுபதி ரெட்டியார் மத்தளம் வாசிப்பார். நான் ஒன்பது வயதுச் சிறுவன் மத்தளத்தின் வலப்பக்கத்திலுள்ள மாப்பசை உலர்ந்து போகாதிருக்க அடிக்கடித் தண்ணீரைத் தொட்டுக் கொண்டு அடிக்க நேரிடும். அதற்கு தகரக்குவளையில் நீரைத் தாங்கிக்கொண்டு செல்லும் கைங்கரியம் என்னுடையதாக இருக்கும். நானும் பஜனைக் குழுவில் ஒருவனாகக் கலந்து கொண்ட பெருமையுடையவனாகக் கருதிக் கொள்வேன். சிறுவர்களிடம் ஏதோ ஒரு வகையில் இத்தகைய, செம்மாப்பு இருக்க வேண்டியது இன்றியமையாமை என்று எனக்குப் படுகின்றது. இந்த உணர்வு பிற்காலத்தில் மேம்பாடு அடைவதற்கு ஊற்றுவாயாகவும். உந்துவிசையாகவும் இருக்கும் என்பது ஓர் உளவியல் உண்மை

நினைவு 2 : உயர்நிலைக்கல்வி பெறாத பெற முடியாத - இளைஞர்களில் சிலர் கோபால கிருஷ்ணன் என்ற இசையாசியரைக் முசிறியிலிருந்து கொணர்ந்து முறையாக இசை பயிற்சி பெற்றனர். இத்திட்டத்தில் முக்கியமாகப் பங்கு கொண்டவர் K.N. நல்லப்ப ரெட்டியாரும் அவர்தம் ஒன்றுவிட்ட சகோதரர்களும் அந்த இசையாசிரியர் என் இல்லத்திற்கு அருகில் குடியிருந்தார். அவர் தம்பியும் அன்னையாரும் அவருடன் தங்கியிருந்தனர். இருவரும் திருமணம் ஆகாதவர்கள். அன்னையாரின் நளபாகம்" அவர்கட்கு அமுதாக அமைந்தது.

இவர்கள் இசைப்பயிற்சி பெற்றகாலத்தில் K.N. நல்லப்ப ரெட்டியாரும் அவர்தம் தம்பிமார்களும் பங்குகொண்டதால் மார்கழி மாத பஜனைக் குழுவிற்கு நல்ல களை தட்டியது. படிப்பிற்காக