பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 நீங்காத நினைவுகள்

பத்தாம் நாள் கருத்தரங்கு நடைபெற்றதாக நினைவு. என் ஆய்வுக் கட்டுரையும், அவையோர் எழுப்பிய வினாக்களும் அவற்றிற்கு யான் அளித்த விடைகளும் "தெய்வத் தமிழ்" என்ற நூலில் இடம் பெற்றுள்ளன.

நினைவு - 6 : நிலைமையையும், கோரிக்கை விடுப்போர் சங்கடங்களையும் பரிதாப நிலையையும் இயன்ற அளவு விதிகளையும் புரிந்து கொண்டு செயலாற்றுபவர் திரு. சுந்தர வடிவேலு. 1950 முதல் தேர்வளார் பணிக்கு முயன்றேன். 1953-56 காலத்தில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் கல்விக்குழு பேரவை இரண்டிலும் உறுப்பினராக இருந்தேன். 12 + 2 முறை டாக்டர் ஏ.எல். முதலியராவர்களைப் பார்த்தேன். மரியாதைக்காக காரைக்குடியில் இருந்தபோது). காரைக்குடியில் ஒருமுறை பார்த்தேன் சில நூல்களைத் தந்தேன். இத்தனை முறை பார்த்தும் புதிதாகப் பார்ப்பதுபோல் பாவனை கொள்வார். நிர்வாகத்தில் இப்படி இருக்க வேண்டும் போலும் என்று நினைத்துக் கொண்டேன். பலமுறை முயன்றும் தேர்வாளர் பணி, பாடத்திட்டக் குழு உறுப்பினர் பதவி கிடைக்கவில்லை. எனக்குப் பரிந்துரைக்க ஆளில்லாமையால் நானே பார்க்க நேரிட்டது 1958இல் பேராசிரியர் ஆ. சீநிவாச ராகவன் மூலம் முயன்று ஐந்தாண்டு வித்துவான் தேர்வுக்குத் தேர்வாளராக இருந்தேன். மூப்புடைமைப் (Seniority) படிவரும் என்று கூறியே தட்டிக் கழித்தார் திரு முதலியார். செல்வர். அரசியலார் இவருக்குத்தான் உதவுவர் என்றுபலர் பேசிக் கொண்டதை அநுபவத்தால் அறிய முடிந்தது. என்னுடன் காரைக்குடியில் பணியாற்றிய இருவருக்கு இருமுறை தேர்வாளர் பணி வந்தது; பரிந்துரைக்கும் பெரியவர்கள் இருந்தமையால்.

1971 இல் திரு. சுந்தரவடிவேலுவைப் பார்த்து எனது முப்பதாண்டு வாழ்வில் ஒருமுறை கூட தேர்வுப் பணி கிடைக்கவில்லை என்றும் சிலருக்கு இக்காலப் பகுதியில் ஏழு, எட்டு முறை வந்துள்ளது என்றும் கூறி வேண்டியபோது, "அப்படியா?" என்றார்கள். அதற்குமேல் பேச்சில்லை. எம்.ஏ. தாள் குறிப்பதிலும்