பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 நீங்காத நினைவுகள்

நடைபெறுகின்றன. பி.எச்.டி பட்டம் பெற்றவர் ஒருவரும் இலர். அங்குள்ள டாக்டர் ரெட்டியார்தான் தக்கவர். பல துறையில் தரமான நூல்களை எழுதியவர் நல்ல புலமையுடையவர். நிருவாகத் திறமையும் உண்டு. அவரைத் தலைவராக வைத்துக் கொண்டு காலத்தை ஒட்டுங்கள்” என்று எழுதிவிட்டார்" எனினும் முறைகேடான பேட்டிதான் நடைபெற்றது. இறையருளால் எனக்குப் பதவி வந்தது."

நினைவு 8 : 1972 அக்டோபரில் திரு. சுந்தர வடிவேலு அவர்கட்கு மணிவிழா நடைபெற்றது. அவர் சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தராக இருந்த சமயம். வேலூர் கண்டர் உயர்நிலைப் பள்ளி கல்லூரி நிர்வாகம் இவர் மணிவிழாவையொட்டி 'மணிவிழா மலர்" ஒன்று வெளியிடத் திட்டம் இட்டது. பல அறிஞர்களைக் கட்டுரை வழங்குமாறு கேட்டதுபோல அடியேனையும் கேட்டது. அடியேன் 'பெரியாரைத் துணைக்கோடல்" என்ற தலைப்பில் எழுதி அனுப்பியதாக நினைவு. "பெரியாரைத் துணைக்கோடல்" என்ற அதிகாரத்தில் வள்ளுவர் கூறியுள்ள கருத்துகளைத் தந்தை பெரியார் வாக்காகக் கொண்டு விளக்கியதாக நினைவு. மலர் கையில் இல்லை. அதனைப் 19 மலர்களுடன் திருவேங்கடவன் பல்கலைக் கழகத்திற்கு அன்பளிப்பாக வழங்கி விட்டேன் அதனால் கட்டுரைபற்றி விரிவாக ாண்டுக் குறிப்பிட முடியவில்லை.

"சுந்தர வடிவேலு சுயமரியாதைக் கட்சிக்காரர் அல்லர்: சுயமரியாதைக் கொள்கைக் காரர்" என்பதைப் புரிந்து கொள்ளாத

10 தாம் வேலை தேடும் படலத்தில் பட்ட துன்பத்தை அறிந்தவராதலால் விளக்கமாக எழுதிவிட்டார். நினைவு அலைகள் முதற் பகுதி காண்க)

11 நினைவுக் குமிழிகள்" - பகுதி 4 என்ற என் நூலில் விவரம் காண்க.

12 "பெரியாரைத் துணைக்கோடல்" என்று வள்ளுவர் பெருமான் குறிப்பிட்டது நாடளாவிய பெரியோர்களை இரட்டுற மொழிதலால் தந்தை பெரியாருக்கும் போய்ச் சேரட்டும் என்ற தலைப்பை வேண்டுமென்றே தேர்ந்தெடுத்தேன்.