பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெது. சுந்தர வடிவேலு 151

உலகம். பெரியார் சுந்தர வடிவேலுவைத் தன் பிள்ளைபோல் பாதுகாத்தார் அவர் ஆசியால்தான் படிப்படியாக உயரவும் முடிந்தது தொடக்கக் காலத்தில் பெரியார் தொடர்பு பல மொட்டைக் கடிதங்கள் பிறக்கக் காரணமாயிற்று" நாளடைவில் அதுவே அவரைக் காக்கும் சிறந்த கவசமும் ஆயிற்று. இன்று தந்தை பெரியார் உலகப் பெரியாராகத் திகழ்கின்றார் சுந்தர வடிவேலுவும் அரிமாபோல் பீடு நடை போட்டு வகித்த பதவிகளிலெல்லாம் சிங்கமாகவே திகழ்ந்து வாழ்ந்து மறைந்தார்.

நினைவு 9 : எம்.ஏ. வகுப்பு. பி.எச்டி ஆய்வு தொடங்கப் பெற்ற பிறகு எனக்கு அளவு கடந்த உற்சாகம் அறிஞர்களைக் கொண்டு சிறப்புக் கூட்டங்கள், வகுப்புக் கருத்தரங்குகள், தேசிய மட்டத்தில் கருத்தரங்குகள் இவற்றை அற்புதமாக நடத்தி வந்ததைத் தமிழ் கூறு நல்லுலகம் நன்கு அறியும். முதல் கருத்தரங்கு 1973-74) திருக்குறளைப் பற்றியது

வழக்கமாக நான் திருப்பதியில் நடத்தும் கருத்தரங்குகள் மூன்று நாள் நடைபெறும். முதல் நாள் முற்பகல் முதல் அமர்வு துணைவேந்தர் தலைமையில் நடைபெறும் அறிஞர் ஒருவர் கருத்தரங்கைத் தொடங்கி வைப்பார் மற்றோர் அறிஞர் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்துவார். மூன்றாவதாக ஒருவர் படம் இருந்தால் திறந்து வைப்பார். துறைத் தலைவர் வரவேற்புரை நிகழ்த்துவார் இந்தத் திருக்குறள் கருத்தரங்கில் சிறப்புரைக்கு ஒருவரையும் அமர்த்த வில்லை. திருவள்ளுவர் படத்தைத் திரு P அரங்கசாமி ரெட்டியார் திருச்சி வழக்குரைஞர் திறந்து வைத்தார் வள்ளுவர் கூறும் நெறிப்படி வாழ்ந்தவர் திரு. சுந்தரவடிவேலு தம்முடைய ஒரே மகனுக்குத் 'திரு வள்ளுவன்' என்று திருநாமம் இட்டுச் சிறப்பித்தவர். தம் துணைவியார் காந்தம் அம்மையார் மனைத்தக்க மாண்புடைவராக வாசுகி அம்மையார்போல் கணவருடன் இணைந்து

13 அடியேன் துறையூரில் பணியாற்றியபொழுது 1941-50) தந்தை பெரியார் அறிஞர் அண்ணா தொடர்புகள் இருந்தபோது பல மொட்டைக் கடிதங்கள் பிறந்து அவற்றில் தொல்லைப்பட்டதை நினைவு கூர்கின்றேன்.