பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெது. சுந்தர வடிவேலு 155

வழக்குத் தொடுத்ததைக் குறிப்பிட்டாராம். அப்போது திரு சுந்தர வடிவேலு, எனக்கு அந்தப் பல்கலைக் கழகத்தைப்பற்றி நன்கு தெரியும். ஊழல் மலிந்த நிர்வாகம், சட்டத்திற்குப் புறம்பாகச் செயற்படுவது. டாக்டர் ரெட்டியாரைப் போன்ற நேர்மையாளரைக் காண்டல் அரிது "தமிழன்" என்ற பார்வையில் கருத்தில் - நோக்கப்படுவதாக இருந்தால், எல்லா மட்டங்களிலும் ஏதோ ஒரு வகையில் தொல்லைகளை அநுபவித்தவர் டாக்டர் ரெட்டியார் நன்றாக உழைப்பவர். பலதுறை அறிவினர். அத்துறைகளிலெல்லாம் நூல்கள் எழுதி தமிழை வளப்படுத்தி வருபவர். கலைக் களஞ்சியப் பணிக்கு அவரைப் போல் பொருத்தமாகப் பொறுப்பு வகிப்பவரைக் காண்டல் அரிது.” என்று சொன்னாராம். திரு. நா. மகாலிங்கம் இதனை ஆமோதித்தாராம் திரு. சி.சுப்பிரமணியமும் "ஆமாம்" என்று தலை அசைத்தாராம். குழு ஒருமனதாக என் நியமனத்தை முதன்மைப் பதிப்பாளர் பணியை - ஒப்புக் கொண்டதாம். எனக்கு ஆணையும் வந்தது பணியில் சேர்ந்ததேன். இங்கு எம்பெருமான் ஏழுமலையான் மூன்று சான்றோர்களின் உருவமாக நின்று தாமோதரன் எழுப்பிய தடைக்கல்லை நீக்கினான் என்பது என் அதிராத நம்பிக்கை இங்ங்னம் எனக்கு திரு. சுந்தர வடிவேலு உதவியது என் நீங்காத நினைவாக இங்குப் பதிவு பெறுகின்றது.

நினைவு 12 : 1978 இல் சென்னை வந்து ஐந்தாண்டுகள் வாடகை இல்லத்தில் என் இருமக்களுடனும் அவர்தம் குடும்பங்களுடனும் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தேன். இடையில் அக்குடும்பங்கள் தனித்தனியாகப் பிரிந்தன. "வீட்டைக் கட்டிப்பார்" என்ற முதமொழிக்கிணங்க பல்வேறு இடர்ப்பாடுகளுடன் காலிமனை வாங்கி 1980 வீடு கட்டி (1983) வேங்கடம்" என்று பெயரிட்டு வாழ்ந்து வருகின்றோம். வீடு எம்பெருமானுடையது. அதில் ஒண்டுக் குடியாக நாங்கள் மாறிமாறி ஒவ்வொரு மகனுடனும் வாழும் நிலை: மன அமைதி சற்றுக் குறைந்த நிலைதான். காலச் சக்கரம் ஒடிக்கொண்டுதான் உள்ளது. பொருளாதார நெருக்கடியால் "புது வீடு புகும்விழா" வைக்கவில்லை. ஆயினும் ஒருமுறை தமிழ் இயக்க நண்பர்கள், ஜஸ்டிஸ் N. கிருட்டினசாமி ரெட்டியார் குடும்பம்