பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

K.N. நல்லப்ப ரெட்டியார் 3

வெளியூர் செல்லுவதற்கு முன்பும் நான் உள்ளுரில் படித்த காலத்திலும் பஜனை மடத்தில் கிடைத்த இராமாயணம், பாரதம், பக்தவிஜயம் பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதை இவற்றையெல்லாம் உரைநடையில் படித்து மகிழ்ந்ததுண்டு. இசையாசிரியர் தொடர்பு ஏற்பட்ட காலத்தில் ரெங்கூன் ரங்காராஜூ, வடுவூர் துரைசாமி ஐயங்கார், கோதைநாயகி அம்மையார் எழுதிய சில புதினங்களையும். வேறு சில துப்பறியும் புதினங்களையும் ஊன்றிப் படித்து அநுபவித்ததுண்டு. அக்காலத்தில் இசையாசிரியர் கோபால கிருஷ்ணனால் எழுதப்பெற்றுக் கைப்படிவடிவில் கிடந்த அழகிய புதினத்தையும் படித்து மகிழ்ந்ததாக நினைவு. இங்ங்னம் படித்த புதினங்களின் பெயர்களில் ஒன்றுகூட நினைவில் இல்லை. "ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி" என்ற புதினத்தின் பெயர் மட்டிலும் நினைவில் உள்ளது. அதனை எழுதிய ஆசிரியர் பெயர் நினைவில் இல்லை.

நினைவு - 3 : KN. நல்லப்ப செட்டியார் தந்தை 1935இல் இறந்ததாக நினைவு. 1926க்கு முன்னதாகவும் நல்லப்ப ரெட்டியார் திருமணத்திற்குப் பின்னரும் அவர் மேல்மாடியில் எப்பொழுதும் இளைஞர் கூட்டம் இருந்து கொண்டிருக்கும். வாசுதேவரெட்டியார், கிழக்கு வீதி ஞானியார் குடும்பத்தைச் சேர்ந்த சீநிவாசன் இவர் இன்றில்லை. 1935க்கு முன்னரே காலகதி அடைந்துவிட்டார். பக்கத்து வீட்டு ஆழிக்கவுண்டன், இன்னும் ஒன்றிரண்டுபேர் பெயர்கள் நினைவு இல்லை ஆகியோர் நிரந்தர உறுப்பினர்கள். ஏதாவது அரட்டை அடித்துக் கொண்டிருக்கும் கூட்டம் அரட்டை அரங்கம். அந்தக் காலத்தில் ஆனந்தவிகடன் மாதம் இருமுறை. பிரசண்ட விகடன் மாதம் ஒருமுறை என்ற இரண்டு இதழ்களும், வேறு ஏதோ ஒன்றிரண்டு இதழ்களும் வந்து கொண்டிருந்தன. எல்லோரும் சுவைக்கும் வண்ணம் சில கட்டுரைகளை நான்தான் படிப்பேன்; நான் படித்தால்தான் நன்கு சுவைமுடிக்க முடிகின்றது என்று கூறி என்னையே படிக்குமாறு வற்புறுத்துவார்கள். சில சமயம் வாசு

2 அப்போது திரு. நாரணதுரைக்கண்ணன் இதன் ஆசிரியர்