பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 நீங்காத நினைவுகள்

இவர்கட்கு மாலைச் சிற்றுண்டி விருந்து அளித்து மகிழ்ந்தேன். பிறிதொருமுறை டாக்டர் சுந்தரவடிவேலு அவர்கட்கு அருமைத் துணைவி காந்தம் அம்மையார் மறைந்த பிறகு பகல் விருந்து அளித்தேன். சுமார் முற்பகல் 10 மணிக்கு வந்தவர்கள் சில மணி அளவளாவிக் கொண்டிருந்து மதியம் 2 மணிக்கு விருந்திற்குப் பின் விடை பெற்றுக் கொண்டார்கள். ஆண்டுதோறும் அக்டோபர் 12-ஆம் நாள் அவர்தம் பிறந்த நாள் அன்று காலையில் வாழ்த்து கூறி வருவது வழக்கமாக இருந்து வந்தது. 1992, 1993 ஆண்டுகளில் மிகவும் தளர்ந்து சிறிது நோய்வாய்ப்பட்டு இறுதியில் மறைந்தார்கள். இறுதிக் காலத்தில் மூன்று மாதத்திற்கொருமுறை சென்று நலம் விசாரித்துத் திரும்புவதுண்டு. முக்தியுலகில் அவர்தம் ஆன்மா தந்தை பெரியாரின் ஆன்மா, துணைவி காந்தம் அம்மையாரின் ஆன்மா, அருமை மகன் திருவள்ளுவனின் ஆன்மா இவர்களுடன் அளவளாவி மகிழ்ந்து கொண்டிருக்கும் என்பது என் நம்பிக்கை, "நான் யார்?" மொழியால் தமிழன் நாட்டால் இந்தியன் இன வழி மனித இனத்தவன். நீர்த்துளி எப்போது பெருமை பெறுகின்றது? எப்போது பெரும் பயன் விளைவிக்கின்றது? கோடி கோடி நீர்த்துளிகளோடு இரண்டறக் கலந்துவிடும்போது குளமாகின்றது: ஏரியாகின்றது: கடலாகின்றது. பெருங்கடலும் ஆகின்றது. இந்நிலையில் பெருமையோடு பயனும் விளைவிக்கின்றது" யான், எனது என்னும் செருக்குள்ள நிலையில் வாழ்ந்து தம் புகழ் நிறிஇத்தாம் மாய்ந்த பெரியோர்களில் ஒருவராகி விடுகின்றார் டாக்டர் சுந்தர வடிவேலு.

நெருநல் உளன்ஒருவன் இன்றில்லை என்னும் பெருமை யுடைத்துஇல் உலகு"

பிறப்பு:1210.1912 சிவப்பேறு 12.04.93

15 நினைவு அலைகள் - முதற்பகுதி - முன்னுரை (பக் Vii) 16. குறள் 336