பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 நீங்காத நினைவுகள்

என்று கூறுவார் கவிஞர் முடியரசன். அக்கால முதல் செட்டிநாட்டுச் சிற்றுர்ப் பகுதிகளில் "பொய் சொல்லா மாணிக்கம்" என்றே வழங்குகின்றனர் ஊர்ப் பெருமக்கள் மேலைச் சிவபுரி இவர்தம் சொந்த ஊர். தந்தையார் சுப்பையா செட்டியார் தாயார் தெய்வயானை ஆச்சி, பிறந்தநாள் 14.7.1917 மிக்க இளமையிலே பெற்றோரை இழந்தவர். தம்பாட்டனாரால் புரக்கப் பெற்றுப் பர்மாவுக்குச் சென்றவர். என்னைவிட பத்து திங்கள் பதினேழு நாட்கள் இளையவர். தாயகம் திரும்பியவர் மேலைச் சிவபுரியில் தமிழ் பயின்றார் பண்டிதமணியின் பரிந்துரையால் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் வகுப்பில் பயின்று முதல் வகுப்பில் முதன்மையாகத் தேர்ச்சி பெற்றார். சில திங்கள் ஆய்வு மாணவராக இருந்து பின்னர் ஏழாண்டுகள் அங்கேயே விரிவுரையாளராகப் பணியாற்றினார். பணிக்காலத்தில் தனிமையாகப் படித்துப் பி.ஓ.எல். எம்.ஏ. எம்.ஓ.எல் பட்டங்கள் பெற்றார். 1948 முதல் புதிதாகத் தொடங்கப் பெற்ற அழகப்பர் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகச் சேர்ந்து பணியாற்றிக் கொண்டிருந்தார் அப்போது பேராசிரியர் ஆ முத்துசிவம் தமிழ்த்துறைத் தலைவர்.

நினைவு - 1 : நான் 1950- ஜூலை 5 ஆம் நாள் முதல் காரைக்குடி அழகப்பர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர் பதவி ஏற்றேன். தெய்வ சங்கல்பம்போல் நான் விண்ணப்பிக்காமலும் முயலாமலும் இப்பதவி கற்பக விநாயகப் பெருமான் திருவருளால், கம்பன் அடிப்பொடி சா. கணேசன் ஆதரவால், கிடைத்தது. வள்ளல் அழகப்பர், உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களோ அல்லது பத்தாண்டுகள் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர்களாக இருந்தவர்களே பேராசிரியர்களாக இருக்கவேண்டும் என்று விரும்பினமையாலும் தமிழ்ப் பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பங்கள் இல்லாததாலும் அடியேன் தலையில் "அட்சதை" விழுந்தது. அக்காலத்தில் தமிழ் எம்.ஏ. பட்டங்கள் பெற்றவர்கள் அரியராகவே இருந்தனர். பி.டி அல்லது எல்.டி பட்டம் பெற்றவர்கள் தமிழ் எம்.ஏ.க்கள் அரியவர்களினும் அரியவராகவே இருந்தனர். ஜூலை 5 ஆம் நாள் கல்லூரி தொடங்கின அன்றே