பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 நீங்காத நினைவுகள்

கெட்டிக் கட்டடத்தில் தமிழ், பொருளியல், வரலாறு, வணிக இயல், கணிதம் இவற்றின் பேராசிரியர்கட்கு துறைத் தலைவர்கள் மாடியிலும் தங்கும் இட வசதிகள் செய்யப் பெற்றிருந்தன திரு. வ.சுப. மாணிக்கத்திற்கு அவர் துறைத் தலைவரல்லராயினும் கெட்டிக் கட்டடத்தில் தனி அறை தரப்பெற்றிருந்தது. கல்வி, உளவியல், அணுவியல்பற்றி நூல்கள் எழுதியதாலும், கலைச் சொற்களைத் தமிழாக்கம் செய்யும்போது மாணிக்கமும் நானும் (pia Qau(\LL.g. 2 or(), “Atomic Energy for Peaceful Uses" argårp தமிழ் நூலுக்குத் தலைப்பு தரும்போது "அணுவின் ஆக்கம்" என்ற தலைப்பைத் தேர்ந்தெடுத்தது இன்றும் என் நினைவில் பசுமையாகவே உள்ளது.

நினைவு - 2 : பேராசிரியர் ஆ. முத்துசிவம் 1954 இல் காலமாகவே மாணிக்கம் தமிழ்த் துறைத் தலைவரானார். நான் பல்லாண்டுகளாகக் கல்லூரி, பல்கலைக் கழகம் ஆகியவற்றின் பல தமிழ்த்துறைத் தலைவர்களின் அறைக்குச் சென்று உரையாடியதுண்டு. பேராசிரியர் முத்துசிவத்துடன் பேசும்போது கவிதை, திறனாய்வுபற்றி மேனாட்டாரின் கருத்துகள் எங்கள் பேச்சில் எழும். வ.சுப.மா விடம் பேசும்போது இலக்கியத்திலும், இலக்கணத்திலும் பல நுண்ணிய கருத்துகள் உதிரும். இன்னும் சற்று நேரம் பேசவேண்டும்" என்ற ஆசை இருந்து கொண்டே இருக்கும். சங்க இலக்கியத்தில் எந்தவித ஐயம் ஏற்பட்டாலும் அதனை எளிதாகப் போக்கிவிடுவார். இந்தக்காலத்தில் மதுரையிலிருந்து வெளிவந்த தமிழ்நாடு" என்ற நாளிதழின் ஞாயிறு மலருக்கு அகப் பாடல்களின் சிலவற்றிற்கு விளக்கம்போல் சிறுகதை பாணியில் கட்டுரைகள் எழுதி வெளியிட்டு வந்தேன்.பொது மக்களின் பாராட்டு எனக்குக் கிடைத்தது. இவற்றுள் 25 கட்டுரைகளைத் தொகுத்து "காதல் ஒவியங்கள்" என்ற தலைப்பில் ஒரு நூலாக வெளிவந்து, சங்க இலக்கியம் படிப்போருக்கு தூண்டுவிசை போல் உதவி வந்தது'

2 வெளியிட்டவர் பழநியப்பா பிரதர்ஸ். திருச்சி-2 இதன் இரண்டாம்

பதிப்பு வெளிவர உள்ளது