பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$62 நீங்காத நினைவுகள்

நினைவே இல்லாது போயிற்று. உசாவியதில் அது மாய்வுற்றுப் போனது (Defunct) என்பதை அறிய முடிந்தது.

திரு சி சுப்பிரமணியம் கல்வியமைச்சராக இருந்த காலத்தில் "கல்லூரித் தமிழ்க் குழு" (1958) என்ற குழு அமைக்கப் பெற்று அதன்கீழ் பல் உட்குழுக்கள் அமைக்கப் பெற்றுப் பல்வேறு துறைகளில் கல்லூரி மட்டத்தில் - துணைப்பாடங்கள் (Minor) நிலையில் கலைச்சொற்கள் தொகுக்கப் பெற்றன. இதற்குமேல் பொதுக்குழு ஒன்றிருந்தது 35 பேர் அதன் உறுப்பினர்கள். அழகப்பர் மறைந்த பிறகு சி. சுப்பிரமணியம் அழகப்பர் அறநிலையத்தின் தலைவராக இருந்தார் என் உழைப்பை நன்கு அறிந்தவர். "அணுவின் ஆக்கம்" என்ற நூலுக்கும் அணிந்துரை வழங்கியவர். என்னைப் பொதுக் குழுவிலாவது ஓர் உறுப்பினர் பதவி வழங்குமாறு வேண்டினேன். "எல்லாம் முடிந்தது. இனி வாய்ப்பில்லை" என்று கையை விரித்துவிட்டார். வாள இருந்துவிட்டேன். சில திங்கள்களில் மேலும் எழுவர் நியமிக்கப்பட்ட செய்தி வெளிவந்தது. இதைச் சுட்டிக்காட்டினேன். அவர் முகம் சுருங்கியதை உணர முடிந்தது. "என்ன செய்வது ரெட்டியார்? ஏதோ கோப்புகள் வருகின்றன. முக்கியமானவை தவிர பெரும்பாலானவற்றில் கையெழுத்துதான் போடுகிறேன். நிர்வாகம் அப்படியாய் விட்டது. கவலைப்படாதீர்கள். வேறு சந்தர்ப்பங்களில் வாய்ப்பு தர முயல்கின்றேன்" என்று ஆறுதல் கூறி அனுப்பினார். "வருவதுதானே வரும்" என்ற பொன்மொழியை நினைத்துக் கொண்டேன்.

நினைவு - 4 : 1948-ஆம் ஆண்டு அழகப்பர் கல்லூரி தொடங்கப்படும் போது பி.ஏ.யில் சிறப்புத் தமிழ் இல்லை. ஒவ்வொரு துறைக்கும் பேராசிரியர் விரிவுரையாளர் என்ற வகையில் நியமனம் செய்ய வேண்டும் பட்டப் படிப்பில் மூன்றாவது பகுதியில் சிறப்புப் பாடம் இருந்தால்தான் பேராசிரியர் பதவி உண்டு. தமிழில் அப்படி

3 திரு அவினாசிலிங்கம் கல்வியமைச்சராக இருந்த காலத்தில் கலைச் சொல்லாக்கக் குழு அமைக்கப் பெற்று உயர்நிலைப்பள்ளி மட்டத்தில் அது செயற்பட்டு, பல துறைகளில் கலைச் சொற்பட்டியல்கள் வெளியிடப் பெற்றுள்ளன (ஏப்பிரல்-1947