பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வ.சுப. மாணிக்கம் 163

இல்லாதிருந்தும் தவறுதலாகப் பேராசிரியர் பதவிக்கு ஆணை அனுப்பப் பெற்று விட்டது. இந்த ஆணையைப் பெற்றவர் திரு ஆ. முத்துசிவம் அதிர்ஷ்டசாலி. இறையருளால் அவர் நினையாதது முன்வந்து நின்றது. ஆணையைத் திருத்த நிர்வாகம் முயன்றபோது நிர்வாகத்தில் முக்கிய உறுப்பினரான கம்பன் அடிப்பொடி குறுக்கிட்டு அதைத் தடுத்து நிறுத்தினார். அது போலவே 1950-இல் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி தொடங்கப்பெற்றபோதும் தமிழ்ப் பகுதிக்கு விண்ணப்பங்கள் இல்லை. அக்காலத்தில் தமிழ் எம்.ஏ படித்தவர்கள் அரியர், எல்.டி. படித்த தமிழ் எம்.ஏ.க்களும் அரியர். தொடங்கும் போதே தமிழ்ப் பகுதியும் இருக்க வேண்டும் என்று வற்புறுத்தியவர். விளம்பரம் வந்தபோது துறையூரில் உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராக இருந்த நான் அஃது என்கண்ணில் படாததால் விண்ணப்பிக்கவில்லை. டாக்டர் வள்ளல் தமிழ்ப் பகுதிப் பொறுப்பை கம்பன் அடிப்பொடிக்கு விட்டுவிட்டதால் அவர் எனக்குத் தந்தி அடித்து நியமனம் பெற்றேன். என் படிப்பைப்பற்றிய விவரம் சா.க.வுக்குத் தெரியாது. எனக்கும். எம்.ஏ பட்டம் இல்லை எல்.டி. பட்டம் இருந்தது பி.எ, பி.எஸ் சியில் முதல் வகுப்பில் தேர்ச்சி இருந்தது. பயிற்சிக் கல்லூரிக்கு இத்தகுதி போதும். அதிகபட்சமாக வித்துவான் பட்டமும் இருந்தது. பத்து ஆண்டுகள் உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் அநுபவத்திற்கு முன்னுரிமையும் இருந்தது. இவை எல்லாம் பேராசிரியர் தகுதிக்கு வலிவூட்டின இவ்வளவுக்கு மேலாக நான் விண்ணப்பிக்காமலே, முயலாமலே, எனக்குப் பதவி வந்தது இறையருள் இருந்தமையால் - என் எதிர்காலம் சிறக்க வேண்டும் என்ற ஊழ் இருந்தமையால், நான் சேர்ந்த அடுத்த ஆண்டே எம்.ஏ.யிலும் தேர்வு பெற்றேன்.

பேராசிரியர் முத்து சிவனார் மறைந்ததும் வ.சுப.மா. பேராசிரியரானார்; தமிழ்த்துறைத் தலைவரானார். தம்முடைய தனிப்பட்ட பிஎச்.டி. ஆராய்ச்சியில் மூழ்கி இருந்தாலும், துறை வளர்ச்சியில் கவனம் செலுத்தினார். பி.ஏ.யில் சிறப்புத் தமிழ் பகுதி மூன்றில் இடம் பெறச் செய்தார் தமிழ் எம்.ஏ. வகுப்பு தொடங்குவதற்கும் முயன்று கொண்டிருந்தார். இக்காலத்தில் திரு