பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வ.சுப. மாணிக்கம் 165

அளவளாவுவேன். உலகியல், அறிவியல், சமயஇயல், இலக்கியம் இவை பேச்சுகளின் சாரமாக அமையும் 945க்குப் புறப்பட்டு தாம் அலுவலகத்தில் இறங்கிக் கொண்டு என்னை கருத்தரங்கு நடைபெறும் இடத்தில் இறக்கி விடச் சொல்லுவார் காரோட்டியை, தந்தையனைய பாசத்துடன் குழைந்து பேசுவார் இரண்டாண்டுகள் ஏதாவது பணியில் அமர்த்தினால் யான் விடுமுறை பெற்றுக் கொண்டு என் ஆய்வினை முடித்து பிஎச்டி பட்டத்துடன் காரைக்குடி திரும்புவதாகக் கூறினேன். அவரால் இந்த வேண்டுகோளை நிறைவேற்ற முடியவில்லை. ஏழுமலையான் தடைகல்லை எழுப்பினான் என்று எனக்குத் தோன்றுகின்றது

காரைக்குடி திரும்பியதும் திரு. அலெக்ஸாண்டர் ஞானமுத்துவைச் சந்தித்து வாரம் இரண்டுமணி எம்.ஏ. வகுப்புக்குப் பாடம் எடுக்க வாய்ப்புத் தந்தால் பிஎச்டிக்குப் பதிவு செய்து கொள்ள வாய்ப்பாக இருக்கும் என வேண்டினேன். சென்னையில் sågsflø(&Bé661GGTGu Gumálášá (Inter Collegiate Teaching) அ.நு.சரித்ததாக அமையும் என்று சொல்லியும் அவர் என் வேண்டுகோளை மறுத்துவிட்டார். வ.சுப.மா. மூலம் முயன்றிருந்தால் ஒருகால் வாய்ப்பு கிடைத்திருக்கக் கூடுமா? என்று இப்போது என் மனம் எண்ணுகின்றது. திருப்பதியில் பணியாற்ற ஊழ் இருக்கும்போது எந்த முயற்சியும் பலன் அளித்திராது என்று என் மனம் அமைதி கொள்ளுகின்றது பிஎஸ்சி. பட்டதாரியாகிய யான் எம்.ஏ. தேர்வுக்குப் போக சுமார் ஐந்தாண்டுகள் (1942-1947 நான் துறையூரிலிருந்த போது பல்கலைக் கழகத்துடன் மேற்கொண்ட போராட்டம் இப்போது நினைவிற்கு வருகின்றது.

நினைவு 6 : பிஎச்டி காதலினால் 1960 ஜூலையில் காரைக்குடியில் பேராசிரியர் பதவியைத் துறந்து மாதம் ஒன்றுக்கு ரூ. 153/= இழப்பில் திருப்பதிச் சென்று விட்டேன். திரு. அலெக்ஸாண்டர் ஞானமுத்து பதவி விலகியதும், டாக்டர் வ.சுப.மா. முதல்வரானார். என் குடும்பம், பிள்ளைகளின் கல்விநிமித்தம் 1966 வரை காரைக்குடியிலிருந்து வந்தமையால் விடுமுறைக் காலங்களில் காரைக்குடியிலிருப்பேன். அப்போது வாய்ப்பு நேரும்பொதெல்லாம்