பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 நீங்காத நினைவுகள்

தேவரெட்டியாரும் 185 அகவையைத் தாண்டியவர்: செங்குணத்தில் தம் மகள் வீட்டில் வாழ்ந்து கொண்டிருந்தவர். அண்மையில் 1994 காலமானார் படிப்பதுண்டு. இவர் நல்ல சுவைஞர். "கணிர்" என்ற குரலில் நன்கு படித்து அனைவரையும் மகிழ்விப்பார். அப்போது நான் கோட்டாத்தூர், துறையூர், முசிறியில் படித்துக் கொண்டிருந்த காலம். விடுமுறை காலங்களில் இந்த சோம்பேறி மடத்தில் கீழுள்ள மகளிரால் சூட்டப் பெற்ற பெயர் பிரசன்னமாவேன். மாலை மூன்று மணி சுமாருக்கு எல்லோரும் கூடுவர்; காலை 9 மணிக்கும் கூடுவதுண்டு. மாலை நேரமாக இருந்தால் சுமார் 4-5 மணிக்கு எல்லோருக்கும் காஃபி வழங்குவார். கறவை மாடுகள் நிறைய இருந்தன. விருந்தோம்பும் பண்பும் மகளிர் உட்பட அனைவரிடமும் நன்கு அமைந்திருந்தது. மனம் கோணாமல் மகளிர் காஃபியை மாடிக்கு அனுப்புவர். அல்லது குரல் கொடுத்தவுடன் மேல் மாடியிலி ருக்கும் சோம்பேறிகளில் ஒருவர் சென்று பெரிய பாத்திரத்தில் காஃபியையும் நாலைந்து டம்ளர்களையும் எடுத்து வந்து வினியோகிப்பர். இப்படியாக K.N. நல்லப்பரெட்டியார் இல்லத்தின் மேல்மாடி விருந்துக்கூடமாகத் திகழும்.

இக்காலத்தில் நான் படித்த இரண்டு நகைச்சுவைக் கட்டுரைகள் இன்னும் பசுமையாக என் நினைவிலுள்ளன. ஒன்று, சென்னையில் ஏதோ ஒரு பள்ளியில் தமிழாசிரியரியாகப் பணியாற்றிய ஆரியூர் பதுமநாபப் பிள்ளை அவர்கள் எழுதிய "பில் கொண்டுவா’ என்ற கட்டுரையாகும். இஃது உணவு விடுதியில் பல்வேறு சுவைமிக்க தின்பண்டங்களைத் தயார் செய்து விற்கும். பாணியைச் சுவையாகக் கிண்டல் செய்வது. ஒரு சமயம் ஒருவர் உணவு விடுதியில் மாலை நேரத்தில் சிற்றுண்டி உண்ணச் சென்றார்.

3. இவர் சிறந்த வைணவர் என்று வி.பூதூர்ப் பெரும்புலவர் கி.வேங்கடசாமிரெட்டியார் மூலம் கேள்விப்பட்டதுண்டு. 1943க்குப் பிறகு பன்மொழிப் புலவர் வே வேங்கடராஜுலு ரெட்டியார் தொடர்பு ஏற்பட்ட பிறகு அவர் இல்லத்தில் திருபிள்ளையவர்களை ஒருமுறை பார்த்துப் பழகியதாக நினைவு. புலவர்களில் இப்படி அரிய நகைச்சுவைக் கட்டுரைகளை எழுதுபவர்கள் அரியர்.