பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வ.சுப. மாணிக்கம் 169

இக்கூட்டங்கட்கு வேறு துறைகளிலிருந்தும் அறிஞர்கள் செவிமடுத்து மகிழ்ந்தனர். இவர்களில் குறிப்பிடத் தக்கவர் துணைவேந்தரின் துணைவியார் இலக்குமி சகந்நாத ரெட்டியாவார் சாதாரணமாக தமிழ்த்துறை ஏற்பாடு செய்யும் அனைத்துச் சிறப்புக் கூட்டங்கட்கும் இவர் தவறாது வந்திருந்து கேட்டு மகிழ்வார்கள். துணைவேந்தர் டாக்டர் சகந்நாத ரெட்டியின் கிண்டல் பேச்சுகளையும் இவர் பொருட்படுத்துவதில்லை. தமிழ்ப் பெண் அகத்திணைக் கொள்கைகளை அறிந்து கொள்வது பொருத்தமல்லவா?

டாக்டர் மா.வின் பேச்சை என் கருத்துப்படி விளக்கினால் மொச்சை பயிறு, கொள்ளு, காராமணி, உளுந்து, இவற்றில் உள்ள சத்து புரதமாயினும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான புரதங்கள் என்று கூறுவேன். இவை அக இலக்கியங்களில் வரும் கற்பனை மாந்தர்கள் போலாவர். அறிவியலறிஞர்கள் உணவு வகைகளில் புரதம் (protein) ஒருவகை சத்து என்று கூறுவது தொல்காப்பியத்திலுள்ள கவிமாந்தர்கள் போலாவர். தொல்காப்பியர் கூறுவன இலக்கணக் கருத்துகள், அறிவியலார் கூறும் புரதம் பற்றிய அறிவியல் கருத்து இவை சிந்தித்து உணர்ந்து அறியப் பெறுபவையாகும். நான் திருப்பதியில் இருந்தவரை அனைத்துக் கருத்தரங்குகளிலும் கலந்து கொள்ள வாய்ப்பளிப்பதுண்டு. பாடத் திட்டக் குழுவிலும் நிரந்தரமாக இருக்கச் செய்தேன். குழுவில் இவர் கூறும் கருத்துகள் உருப்படியானவைகளாக இருக்கும்.

நினைவு 9 : எளிய வாழ்க்கையுடைவர். திருப்பதிக்கு வரும்போது தம் துணைவி ஆச்சியுடன் ஒருமுறை வந்தார்.

7 ஏண்டி தமிழ்த்துறைக்கு அடிக்கடி ஓடுகிறாயே என்ன ஆராய்ச்சி செய்கிறாயா?" என்று கிண்டல் செய்யும்போது "ஆமாம் போகத்தான் செய்வேன். திருப்பதியில் அங்கு மட்டுந்தானே தமிழ் இலக்கியப் பேச்சுகள் நடைபெற்று வருகின்றன? உங்களுக்குச் சுவைக்கத் தெரியாது. சும்மா இருங்கள்" என்று பதில் சொல்வாராம் டாக்டர், ரெட்டி தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். இடைநிலை வகுப்புவரை தெலுங்கு படித்தவர். சில நுட்பங்கள் புரிந்து கொள்ள முடியும்