பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 நீங்காத நினைவுகள்

தேவஸ்தான சத்திரத்தில் தங்கும் அறைக்கு ஏற்பாடு செய்தேன். திருப்பதியிலுள்ள கோவிந்தராச சுவாமி. இராமர் கோயில், கபில தீர்த்தம் முதலியவற்றை அவர்களே பார்த்துக் கொள்ள வசதியாக இருக்கும் பொருட்டுச் சத்திரத்தில் ஏற்பாடு செய்தேன். திருச்சானுருக்கு - அடிக்கடிப் பேருந்து இருப்பதால் அவர்களே சென்று வந்தனர். ஒருமுறை இருவருக்கும் என் இல்லத்தில் விருந்து அளித்தேன். இருவரையும் கல்லூரி வளாகத்தில் பல இடங்களையும் சுற்றிக் காட்டினேன். திருமலைக்கு இட்டுச் சென்று தரிசனம் செய்துவைத்தேன்.

தனியாக வரும்போது எல்லாம் என் இல்லத்தில் தங்கி என் விருந்தினராக வைத்துக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். தனியாக வரும்போது நானும் திருமலைக்குச் சென்று வருவதுண்டு. தரிசனம் செய்யும் போதும் கோயிலைச் சுற்றி வலம் வரும்போதும் டாக்டர் மா. பேசவே மாட்டார். மனத்தில் ஏதோ இறைவனைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருப்பதாக கருதிக் கொள்வேன். மிக்க பக்தியுடன் வழிபாடு செய்து கொண்டு வருவதைக் கண்டு மகிழ்வேன். பலதடவை வேங்கடவன் வழிபாட்டை மிக்க கருத்துடனும், கவனத்துடனும் செய்து வந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.

நினைவு - 10 : பெங்களுர், திருவனந்தபுரம் பல்கலைக் கழகங்களில் தமிழ்பற்றிய பாடத்திட்டக் குழுக்களின் கூட்டங்களில் நாங்கள் இருவரும் கலந்து கொள்ளும் சந்தர்ப்பங்களும் இருந்தன பெங்களுரில் நடைபெற்ற கூட்டத்திற்கு வந்தபோது (1972 என்பதாக நினைவு அவர் தங்கின எவரெஸ்டு விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி சுவையானது அருவருக்கத்தக்க சுவையுடையது.அதிகாலையில் சுமார் ஐந்து மணிக்கு இருப்பூர்தியிலிருந்து இறங்கி நிலையத்திற்கு அருகிலுள்ள எவரெஸ்டு விடுதியில் அறையொன்று வாடகைக்கு எடுத்து அதில் தங்குகின்றார். கைப்பெட்டியிலிருந்து பல்பசை, துரிகை (Brush), சோப்பு இவற்றை எடுத்துக்கொண்டு குளியலறைக்குப் போகத் தயாராகும்போது எதிர் வரிசை அறையொன்றிலிருந்து ஓர்