பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 நீங்காத நினைவுகள்

வந்திருந்தனர் கூட்டம் வழக்கமாக பகல் ஒரு மணிக்கு முடிந்துவிடும். நாங்கள் அறைக்குத் திரும்பி விடுவோம்.

இந்தக் கூட்டம் முடிந்து அறைக்குத் திரும்பும்போது டாக்டர் வ.சுபமா மிக்க வருத்தத்துடன் அதிகாலை அநுபவத்தைக் கூறினார். டாக்டர் மா வை. அறைக்குப் போகாமல் என் அறையில் நிறுத்திக்கொண்டேன். தண்.கி.வேயும் எங்களுடன் இருந்தார். மாலை 6 மணிக்குக் கிளம்பும் இருப்பூர்தியைப் பிடிப்பதற்கு முன் டாக்டர் மா. அறையைக் காலி செய்வதற்கு அவருக்குத் துணையாக எவரெஸ்டு விடுதிக்குச் சென்றோம். தரை தளத்திலுள்ள அறைகள் யாவும் குடும்பத்துடன் வருபவர்களுக்காகவும், முதல் தளத்திலுள்ள ஒருவர் தங்கும் அறைகள் யாவும் தனியாக ஒற்றையாக வருபவர்க்குமாக இருந்ததைக் கண்டோம். வரவேற்புப் பகுதியில் கடாமீசை, ஓணான் மீசை, கொடுவாள் மீசையுடன் இரண்டு மூன்று பேர் இருப்பதையும் கண்டோம். இவர்கள் விடுதியார் உடன்பாட்டுடன் மாடியிலுள்ள பெண்கட்குத் துணையாக இருப்பவர்கள் என்று எங்கள் கருத்திற்குப் பட்டது. மகளிர் வேட்டை நோக்கத்துடன் வரும் ஏமாறக் கூடிய இளைஞரை மடக்கி கடிகாரம், பணம் முதலியவற்றைப் பறிப்பவர்கள் இவர்கள் என்றும் எங்கள் மனத்திற்குப் பட்டது. இச்செயல்கட்கெல்லாம் காவல் துறைச் சேவகர்களும் உடந்தையாக இருக்க வேண்டும் என்றும் முடிவுக்கு வந்தோம். "போகாத இடந்தனிலே போக வேண்டாம்" என்ற பாட்டியின் வாக்கை நினைத்துக் கொண்டோம். அடுத்த ஆண்டு முதல் டாக்டர் மா. என்னுடன் தங்க ஏற்பாடு செய்து கொண்டதால் இத்தகைய நிகழ்ச்சிகள் எழுவதற்கே இடம் இல்லாது போயிற்று.

நினைவு - 11 : மதுரை சென்னைப் பல்கலைக் கழகங்களில் பிஎச்.டி. பட்டத்திற்குப் பதிவு செய்யும் மாணாக்கர்களைச் சோதிப்பதற்காகவும் வழிகாட்டுவதற்காகவும் அமைக்கப் பெற்றிருந்த மூதறிஞர் குழுக்களில் (Doctoral Committees) நானும் டாக்டர் மாவும் பலமுறை சந்திக்கும் வாய்ப்புகள் இருந்தன. ஒருமுறை (1973 என்பதாக நினைவு சென்னை மாநிலக் கல்லூரியில் பணியாற்றிய திரு. வெள்ளையன், திரு முத்துசாமி, திரு நன்னன் ஆகியோர்