பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வ.சுப. மாணிக்கம் 173

பிஎச்.டி க்குப் பதிவு செய்து கொண்டிருந்தனர். இவர்கள் செய்திருக்கும் ஆய்வுப் பணிகளின் முறையைச் சோதிப்பதற்காக நாங்கள் வந்திருந்தோம். திரு. வெள்ளையன் தம் ஆய்வுப் பணிகளை நாங்கள் மனநிறைவு கொள்ளும் அளவுக்குச் செய்யவில்லை. டாக்டர் மா. அவர்கள் சற்றுக் கண்டிப்பானவர் என்பதை அனைவரும் அறிவர். அன்று திரு. வெள்ளையனிடம் "வருகிற கூட்டத்திற்கும் இட்ட பணிகளைச் சரிவரச் செய்யாமல் இன்று வந்தது போல் அரைகுறையாகச் செய்து வந்தால் பதிவைத் தள்ளுபடி செய்யுமாறு பல்கலைக்கழகத்திற்குப் பரிந்துரைக்க நேரிடும்” என்று சற்றுக் கடுமையாக எச்சரித்தார். இந்த அதிர்ச்சியாலோ, வேறு ஏதோ காரணத்தினாலோ அன்றிரவே திரு வெள்ளையன் காலமானார் என்று செய்தி திருப்பதிக்கு எட்டியது. டாக்டர் மாவுக்கும் அண்ணாமலைநகர் எட்டியிருக்க வேண்டும். அவரும் மிகவும் வருந்தி இருக்க வேண்டும்.

நினைவு - 12 : 1976 ஆகஸ்டு திங்கள் திருமலை ஏழுமலையான் சந்நிதியில் என் மணிவிழா அவன் திருமண விழாவாகக் கொண்டாடப் பெற்றது. 1977 செப்டம்பர் 24இல் என் மணிவிழாவைத் திருவேங்கடவன் பல்கலைக் கழகத் தமிழ்த் துறையில் மாணவர்களும், ஆசிரியர்களும் கொண்டாடினர். இதனையொட்டி சமயப் பெரியார்கள், பல்கலைக் கழக மானிய ஆணையத் தலைவர், துணைத் தலைவர்கள். துணை வேந்தர்கள், என்னுடைய ஆசிரியர்கள், உச்ச நீதிமன்ற உயர்நீதிமன்ற

9 திரு வெள்ளையனின் துணைவியார் திருமதி. சுந்தரி சென்னை - அடையாறு அரசு Polytechnicஇல் முதல்வராக இருந்து ஓய்வு பெற்றவர். இவருடைய பெண் மாதவி எம்.பி.பி.எஸ் ஸுக்கும் புகழ்சான்ற வழக்குரைஞர் W.C. பழநிசாமியின் மகன் W.F. ஆனந்தன் எம்.பி.பி.எஸ்ஸுக்கும் சென்னை குசலாம்பாள் திருமண மண்டபத்தில் 29.893 இல் திருமணம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட எனக்கு திரு. வெள்ளையன் ஒளிப்படத்தைப் பார்த்ததும் பழைய காட்சிகள் படலம் படலமாக என் மனத்தில் எழுந்தன. அதுவரை மணப்பெண் யார் என்பதே எனக்குத் தெரியாது.