பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

K.N. நல்லப்பு ரெட்டியார் 5

அவர் கேட்டவற்றையெல்லாம் வினியோகிப்பவர் தந்து கொண்டிருந்தார். இவர் புதிய வகைகளின் பெயர்களைச் சொல்லிச் சொல்லி கேட்டுக் கொண்டே இருக்க விநியோகிப்பவரும் கொடுத்துக் கொண்டே இருந்தார். இறுதியாக "பில் கொண்டுவா" என்று உண்பவர் கேட்க விநியோகிப்பவர் பில் எழுதுபவர் உருவம் போல் செய்யப்பெற்ற ஓர் இனிப்புப் பொருளைக் கொண்டு வந்து வைத்தாராம். இப்படிக் கட்டுரை முடிகின்றது.

மற்றொன்று தீபன்' எழுதிய "முதலியார் வீட்டுக் கல்யாணம்" என்ற நகைச்சுவைக் கட்டுரை. பல்வேறு திருமண நிகழ்ச்சிகளை - வரவேற்பு, திருப்பூட்டு, விருந்து, மணமக்களின் "பட்டணப் பிரவேசம் இரதம் போல் செய்யப் பெற்ற பல்லக்கில் முன்னிரவில் ஊர்வலம் வருதல் - பல்வேறுபட்டவற்றைச் சுவையாக வருணிப்பது பகல் உணவு உண்ட பிறகு ஒவ்வொரு இலையிலும் சிறிது விளக்கெண்ணெயை ஊற்றித் தடவி வெளியில் போடுவார்களாம். உணவில் அதிகமான நெய்யின் இருப்பைக் காட்ட இதனால்தான் முதலியார் ஜம்பம் விளக்கெண்ணெய்க்குக் கேடு" என்ற பழமொழியும் எழுந்தததாம். பட்டணப் பிரவேசத்தில் ஊர்வலத்திற்கு முன்னால் இரண்டு யானைகள் செல்ல ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும் என்று ஒருவர் யோசனை கூற, மற்றொருவர் கோயில் யானைகளை வாடகைக்கு அமர்த்திக் கொள்ளலாம் என்று கூறினாராம். அதற்கு கட்டுரையாளர். அது வேண்டா, வீண் செலவு. நம் சோமயாஜி மாமாவையும் முத்தய்யா மாமாவையும் முன்னால் செல்ல ஏற்பாடு செய்து கொள்ளலாம்" என்று சொல்வதுடன் கட்டுரை முடிகிறது.

நினைவு - 4 : K.N. நல்லப்ப ரெட்டியாருக்குத் திருமணம் (1928இல் நடைபெற்றதாக நினைவு. நான்கு நாள் திருமணம். கோலாகலமாக நடைபெற்றது. தம் தாய் மாமன் சதாசிவ ரெட்டியாரின்

4 இவர் டி.கே.சியின் திருமகன் தீத்தாரப்பன். அனைத்திந்திய வானொலி யில் பணியாற்றிக் கொண்டிருந்து அற்ப ஆயுளில் திருநாடு அலங்கரித்தவர் - சிறந்த கற்பனை எழுத்தாளர்.