பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 நீங்காத நினைவுகள்

ஏழுமலையான் திருவருளால் உடல்நலம் நன்கு உள்ளது அவனருளால் ஆய்வுப்பணி எழுத்துப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. "தீதும் நன்றும் பிறர் தரவாரா" என்பது சங்கச் சான்றோர் பொன்மொழி.

நினைவு-14 : இறையருளால் டாக்டர் வ.சுபமாணிக்கத்திற்கு மதுரைப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் பதவி வந்தது. டாக்டர் மு.வ விற்குப் பிறகு அதன் பன்முக வளர்ச்சியில் இவருக்குப் பெரும் பங்கு உண்டு. வாழ்க்கையில் மிகவும் சிக்கனத்தைக் கடைப்பிடித்த பெருமகன் பல்கலைக் கழக வளர்ச்சியில் பணத்தை வாரி இறைத்தார். கம்ப்யூட்டர், எம்.பி.ஏ. வணிகஇயல், எனர்ஜி போன்ற பல துறைகள் இவர் காலத்தில் உருப்பெற்று வளர்ந்தன. ஆசிரியர்களும் ஊழியர்களும் வீடுகள் கட்டிக் கொள்வதற்குப் பல்கலைக் கழகத்தின் மூலம் கடனுதவி பெற ஏற்பாடு செய்தார். சொந்த வசதிகளில் கவனம் செலுத்தாது பல்கலைக் கழக வளர்ச்சியில் கண்ணும் கருத்துமாக இருந்த மு.வ.வுக்கு அடுத்தவராகத் திகழ்ந்தவர் டாக்டர். மாணிக்கம் அஞ்சல் வழிக் கல்வியில் பாடங்களை அனுப்புவதில் அஞ்சல் விதிகளைக் கவனியாமல் பணம் அதிகமாக விரயம் ஆகிக் கொண்டிருந்தது. அச்சிட்ட படிகளை அனுப்புவதற்குத் தனிச் சலுகை உண்டு. கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு சலுகை இருப்பதை அறியாமல் செலவாகிக் கொண்டிருந்தது. டாக்டர் வ.சுபமா இதனைக் கண்டறிந்து சரியானை விதியைக் கடைப்பிடிக்கச் செய்தார். இதனால் பல்லாயிரக் கணக்கான வெண்பொற்காசுகள் பல்கலைக்கழகத்திற்கு மீதமாயின. இவர் காலத்தில்தான் மதுரையில் ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது.

இவர் காலத்தில் பல்கலைகழத்தில் ஓரிரு பணிகள் இடப்பெற்றன. அவற்றை மனநிறைவுடன் ஆற்றினேன்.

நினைவு - 15 : திருப்பதியிலிருந்தபோது மாணவர்கட்காக

நடைபெறும் வாராந்திரக் கருத்தரங்குகளில் அக இலக்கியமும் இடம் பெற்றது. மாணவர்கட்காக அக இலக்கியத்தில் பல ஆய்வுக்