பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வ.சுப. மாணிக்கம் 179

பாரதத்திற்கே உரிய தனிமலை இமயமலை என்று அறிபவன் "பாரதன்" ஆவான். தமிழுக்கே உரிய தனி இலக்கியம் அகத்திணை என்று அறிபவன் தமிழன்" எனப்படுவான் தமிழின் பெருமையும் அருமையும் உணர்ந்த புலவர்கள் தமக்காக எழுதுவதில்லை: தமிழர்க்காக எழுதுகின்றனர். பிறப்பால் தமிழர்களைச் சிறப்பாலும் தமிழாக்க எழுதுகின்றனர் இச்சிறந்த நோக்கத்தோடு எழுதிய இனிய பெரிய இந்நூலைக் கற்றுப் பயனடைய வேண்டுகின்றேன். -வ.சுப. மாணிக்கம் மதுரை - 625 021, 7-12-1981

நினைவு 16 : டாக்டர் மா. துணைவேந்தர் பதவியிலி ருந்து ஓய்வு பெற்ற பிறகு காரைக்குடி கதிரக்கத்தி"லிருந்து கொண்டுதம் வழியில் தமிழ்ப் பணியாற்றிக் கொண்டிருந்தார். நான் சென்னை அண்ணாநகர் "வேங்கடத்தி"லிருந்து கொண்டு என் வழியில் பணியாற்றிக் கொண்டுள்ளேன் எங்கட்குத் தமிழ்ப் பணி என்பது மூச்சை உள்ளுக்கு வாங்கி வெளியிடுவது போல இயல்பாக அமைந்த பண்பு என்பதைப் பலரும் அறிவார்கள்

இந்நிலையில் பாண்டிச்சேரி மத்திய பல்கலைக் கழகம் டாக்டர் வ.சுபமாணிக்கத்தைத் தலைவராகவும். டாக்டர் ஆறு. அழகப்பன் (அண்ணாமலைப் பல்கலைக்கழகம்), டாக்டர் M. சண்முகம் பிள்ளை (மதுரை), டாக்டர் ந. சுப்புரெட்டியார் (சென்னை), டாக்டர் த. கோதண்டராமன் புதுவை, திரு. ந சவரிராசன் புதுவை, புலவர் ஆ. அருணகிரி (புதுவை) என்று அறுவரை உறுப்பினர்களாகவும் கொண்ட ஓர் உயர்மட்டக் குழுவை அமைத்து சுப்பிரமணிய பாரதி தமிழ்மொழி, இலக்கியத்துறை ஆராய்ச்சி மையம் அமைப்புபற்றி ஆழமான - அகலமான திட்டம் ஒன்றை வகுத்துத் தரக் கேட்டுக் கொண்டது. இந்தக் குழு ஏப்பிரல் 4-5 ஏப்பிரல் 25 மே 19-20 (1986) நாட்களில் மூன்று முறை கூடி நான்கு புலங்களையும் (Facuities) பதினேழு துறைகளையும் (Departments) 24 பேராசிரியர்கள், 31 துணைப் பேராசிரியர்கள், 40 விரிவிரையாளர்கள் ஆகியோர் அடங்கிய ஆசிரியர்களையும் கொண்ட திட்டம் ஒன்றைச் சமர்ப்பித்தது. இப்பொழுது தமிழ்