பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 நீங்காத நினைவுகள்

சீமந்த புத்திரி இரச்சமாள் என்ற பெண்மணியை மணந்து கொண்டார். சதாசிவ ரெட்டியார் என் ஒன்று விட்ட சகோதரர் என் தந்தையாரை விட மூத்தவர். அவருடைய மகன் கணபதி என் வயதையுடையவன். நாங்கள் இருவரும்தான் முதன்முதலாக ஊரைவிட்டு உயர்கல்விக்காக வெளியூர் சென்றவர்கள். இது கோட்டாத்தூர் வரலாற்றில் முதல் இடம் பெறவேண்டிய செய்தி.

அக்காலத்தில் வீட்டில்தான் திருமணம், திருமண மண்டபங்கள்பற்றிக் கேள்விப்படாத காலம். வாசல் முதல் தெரு வரையிலும் கொட்டகைகள் வேயப் பெற்றிருக்கும். உணவு பரிமாற வீட்டில் இடம் போதாது. வீடு, திண்ணை, வாசல் முதலிய எல்லாவிடங்களிலும் உண்ணும் இடங்களாகப் பயன்படுத்தப் பெறும். கொட்டகையின் தெருவாயில் குலைபோட்ட பெரிய வாழைமரங்களாலும், இளநீர்க் குலைகளாலும், கூந்தற் பனைகளாலும், மாவிலைத் தோரணங்களாலும் மிகச்சிறப்பாக அலங்கரிக்கப் பெற்றிருக்கும். கொட்டகைக்கால்கள் யாவும் பச்சிலைக் கொத்துகளால் மூடப்பெற்று அழகாகக் காட்சியளிக்கும்.

முகூர்த்தம் நடைபெறும் இடம் கூரை போன்ற அலங்காரக் கொட்டகையாகும். மழைபெய்தாலும் ஒழுகாமல் சிறந்த முறையில் இரட்டைத் தென்னங்கீற்றுகளால் வேயப்பெற்று அதற்குமேல் கோரைப்புல் அல்லது வைக்கோல் தாளரியால் மூடப்பெற்று மூங்கில் பிளப்புகளால் இறுகக் கட்டப்பெற்றிருக்கும். தரையும் நல்லமண்ணால் வழுவழுப்பாகச் செய்யப்பெற்றிருக்கும். தரை நாளடைவில் கெட்டுப் போனாலும் கூண்ர பத்து ஆண்டுகட்கு மேல் கெடாமல் இருக்கும். கூரையின் உட்புறம் வண்ணத்தாள்கள். குருநாதப் பட்டை இரவிவர்மாவின் இறைவனின் திருவுருவங்களால் முருகன், இராமன், கண்ணன், திருமணங்கள் பற்றியவை அலங்கரிக்கப் பெற்று அழகும் பொலிவும் பெற்றுவிளங்கும். K.N. நல்லப்பரெட்டியார் வீட்டு வாசலில் இக்கொட்டகை பத்தாண்டுகட்கு மேல் பொலிவுடன் திகழ்ந்ததாக நினைவு. பெரகம்பியிலிருந்து நான்கோட்டாத்துர் வருவதற்கு முன்னர் சின்னப் பண்ணையார் வீட்டுத் திருமணத்தில் இத்தகைய கொட்டகை இருந்தது.