பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 நீங்காத நினைவுகள்

சதாசிவ ரெட்டியார் (ஒன்றுவிட்ட சகோதரர் - திருமணத்திற்கு எல்லாச் செலவுகளுக்கும் பணம் உதவியவர் - மகிழ்வுந்தில் சென்றதாக நினைவு. அப்போது K.N. நல்லப்பரெட்டியார் நல்ல உடல்நிலையில் இருந்தார். ஆனால் நோய் அவ்வப்போது திடீரென்று தலைகாட்டும் டாக்டர் பட் தான் சமய சஞ்சீவியாக நின்று உதவுவார். திருச்சி டாக்டர் காளமேகமும் நோய்க் கடுமையாக இருந்தால் உதவுவார். திருமண ஆண்டில் எனக்கும் நீண்ட நாட்கள் வயிற்றுப் போக்கு ஏற்பட்டு முதல் ஆண்டு பி.எஸ்.சி படிப்பைத் தொடராது நிறுத்திக் கொள்ள வேண்டியதாயிற்று ஓராண்டுப் படிக்கும் காலம் பாழ்பட்டது

நினைவு - 7 1939-இல் பிஎஸ்சி தேர்வில் முதல் வகுப்பில் மூன்றாம் நிலையில் தேர்ச்சி பெற்றேன். 1939-40 ஆண்டு வேலை தேடும் படலமாக அமைந்தது. வேலை கிடைக்கவில்லை. இந்த நிலையில் என் மனைவிக்கு 1940-சனவரி வாக்கில் சிறுநீரகத்தில் ஏதோ கோளாறு ஏற்பட்டு திருச்சி தென்னுர் சாலையிலுள்ள காளமேக மருத்துவமனையில் சேர்க்கப்பெற்று சுமார் இரண்டுமாத காலம் விட்டுவிட்டு சிகிச்சை பெற்று வந்தாள். நான் துணைக்கு இருந்தேன். என் தாயார் உணவு தயாரிப்பதற்காக கோட்டாத்தூரி லிருந்து வந்திருந்தார்கள். அப்போது நல்லப்பரெட்டியாரும் சிறுநீர் அடைப்பு ஏற்பட்டு காளமேகத்திடம் சிகிச்சை பெற்று வந்தார். மாலைநேரத்தில் சில சமயம் அருகிலுள்ள ஒரு சிறு உணவு விடுதிக்குச் கூட்டிச் சென்று சிற்றுண்டி காஃபி வழங்குவார். சிகிச்சை முடிந்து நாங்கள் பொட்டணம் சென்று விட்டோம். அங்கு அடிக்கடி கால் வீக்கம், முகத்தில் நீர் சுரத்தல் தலைகாட்டும். சிகிச்சைக்குப் போகாமல் இறைவன் கருணையை நம்பி வாளா இருந்துவிட்டோம். இந்த ஆண்டு (1940 ஏப்பிரல் வாக்கில் சைதையில் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர முடிவு செய்து விண்ணப்பமும் அனுப்பப் பெற்றது. ரூ. 1000/= வேண்டுமே. மாமனார் வீட்டில் உதவுவதாக இல்லை. கோட்டாத்துரில் யாரும் கடனாகக் கூட உதவ முன்வரவில்லை. அக்காலத்தில் சிற்றுரில் பணப்புழக்கத்தில் அதிகத் தடுமாற்றம். ஆகவே ஆலத்துடையம் பட்டியிலிருந்த ஒன்றரை