பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

K.N. நல்லப்ப ரெட்டியார் 9

குழிநிலத்தை ரூ.800/= க்கு மிகவும் ஈனக்கிரயம் என்று தெரிந்தும் விற்று சைதையில் பயிற்சி பெற்று எல்.டி பட்டமும் பெற்றேன்.

நினைவு - 8 : 1941 - ஜூன் முதல் நான் புதிதாகத் தொடங்கப் பெற்ற நடுநிலைப் பள்ளியின் முதல் தலைமையாசிரியன். K.N. நல்லப்ப ரெட்டியார் தம் தம்பி நல்லுசாமியைத் தொடக்க காலத்தில் இலால்குடி உயர்நிலைப் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைத்தார். அப்போது நல்லுசாமி சிறுவன். மாணவர் உணவு விடுதி துறையூரில் தொடக்கக் காலத்தில் இல்லை. சில ஆண்டுகட்குப் பின்னர் தமிழாசிரியர் திரு. v.C. கிருட்டின சாமி ரெட்டியார் முயற்சியால் பள்ளி நிர்வாக அனுமதியுடன் தொடங்கப்பெற்றது. சில ஆண்டுகள் இயங்கிய பின் மூடப்பெற்றது). அக்காலத்தில் நல்லுசாமியைத் துறையூரில் கொண்டு வந்து சேர்த்தார். அவர் தமையனார். அவன் ஐந்தாவது படிவத்தில் படித்துக் கொண்டிருந்தபோதே 1944) திருமணம் உறுதி செய்யப் பெற்றது. தந்தை பெரியார் தலைமையில் கோட்டாத்துரில் திருமணம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. கடவுள் பக்தி மிக்கவராக இருந்தாலும் காந்தியடிகள்மீது மிக்க மரியாதை கொண்டிருந்தாலும், திராவிட இயக்கக் கொள்கைகள்தாம் அவர் மனத்தை அதிகமாகக் கவர்ந்தன. தந்தை பெரியார்பால் மிக்க ஈடுபாடு கொண்டவராக இருந்தார். பல ஆண்டுகள் நல்லுசாமிக்குக் குழந்தைப் பேறு ஏற்படவில்லை. தமக்கும் அப்பேறு இல்லை; தம் தம்பிக்கும் இல்லையே என்று மிகவும் மனம் கவன்றார். இறையருளால் முதற் பெண் எடுத்த குடும்பத்திலேயே மற்றொரு பெண்ணை எடுத்துத் திருவரங்கத்தில் நான் காரைக்குடியில் பணியாற்றிய போது வைதிக முறைப்படி திருமணம் நடத்தினார். இரண்டாவது பெண்ணுக்கு அவர் வாழ்ந்த காலத்திலேயே மூன்று ஆண்குழந்தைகள் பிறந்தன. குலம் விளக்கம் பெற்றது என்ற மகிழ்ச்சி கடலில் ஆழ்ந்திருக்க வேண்டும்’

5 வைதிக முறையில் திருமணம் நடைபெற்றதால்தான் இரண்டாவது பெண்ணுக்கு மக்கட்பேறு ஏற்பட்டது என்று கருதுவது தவறு. முதற் பெண்ணுக்கு உடற் பொருத்தக் கோளாறினால்தான் மகப்பேறு வாய்க்கவில்லை என்று கருதுவதுதான் அறிவுடைமை.