பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 நீங்காத நினைவுகள்

நினைவு - 9 : (1941-50 ஆண்டுகளில் நான் துறையூர்ப் பள்ளியில் தலைமையாசிரியனாகப் பணியாற்றி வந்தேன். பள்ளியிலேயே ஒருபுறம் என் "சிறு குடில்" அமைந்திருந்தது. அப்போது அடியிற் கண்டவற்றிற்காக திரு. நல்லப்ப ரெட்டியார் வருவதுண்டு. சில சமயம் ஒன்றிரண்டு நாட்கள் தங்குவதும் உண்டு. நானும் துறையூருக்கு வந்த நான்கு ஆண்டுகட்குப் பிறகு பாலுக்காக ஒரு பசுமாடு பராமரித்தேன். அதில் முழுக் கவனம் என்னுடையதாக இருந்தது.

(1) புலிவலத்தில் இருந்த டாக்டர் பட் நான் இருக்கும் பள்ளிக்கருகிலேயே வீடு கட்டிக் கொண்டு குடியேறிவிட்டார். துறையூர் பாலக்கரையருகில் ஒரு சிறு மருத்துவமனையையும் தொடங்கியிருந்தார். அவரிடம் சிகிச்சை பெறுவதற்காக வருவதுண்டு: என்வீட்டில் தங்குவதும் உண்டு.

(2) மாணவர்களைச் சேர்க்கும் தொடக்கக் காலத்தில் சில மாணவர்களைச் சேர்ப்பதற்குப் பரிந்துரைக்காக வருவார். என்னால் இயன்ற வரை தோழ ஆசிரியர்களின் துணை கொண்டு உதவுவேன். அவரும் மனநிறைவுடன் திரும்புவார்.

(3) ஆண்டு இறுதியில் மாணவர்களை வகுப்பு மாற்றம் செய்யும் சந்தர்ப்பங்களிலும் வருவார். தொல்லைகட்கெல்லாம் மகுடமாக இருப்பது இதுதான். மாணவர்களை வகுப்பு மாற்றம் செய்வதற்காக அவர்களின் மதிப்பெண் பட்டியலை ஆய்வதற்காக ஆசிரியர்களின் இரகசியக் கூட்டத்திலும் "கலந்து கொள்ள" வந்துவிடுவார். இது எனக்கு "தர்ம சங்கடமாக" இருக்கும். எல்லைக்குள்ளும் எல்லைக்குச் சற்றுக் கீழும் மதிப்பெண் பெற்ற மாணவர்களின் தேர்வு பற்றிப் பேச வேண்டியிருக்கும். ஆசிரியர்கள் "முகம் சுளிப்பார்கள்" என்ன சொன்னாலும் கேட்பதில்லை. இல்லத்தில் மைத்துனர் முறையில் உறவாடுவதுபோல் பள்ளியிலும் "அதுவும் "இரகசிய கூட்டத்தில்" சலுகையுடன் உறவாடுவது தகாது என்பது அவருக்குப் புரிவதில்லை. என்ன செய்வது? மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல்" திண்டாடுவேன். என்