பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

K.N. நல்லப்ப ரெட்டியார் 11

மனத்திற்குள்ளும் ஆசிரியர் மனத்திற்குள்ளும் நடைபெறும் போராட்டங்களை அவர் எப்படி அறிய முடியும்? அவற்றை நாங்கள்தாம் வாய்விட்டுப் பேச முடியுமா?

(4) பள்ளிக்கு எதிரில் மாவட்ட முனிசீப் மன்றம் உள்ளது. எங்கள் வீட்டு நிலைமை தெரியும். வாழை இலை கிடைக்காது. திடீர் என்று தயிர் கிடைக்காது. இதனால் வாழை இலைக்கட்டு, தயிர் முதலி யவற்றை எடுத்துக் கொண்டு வில் வண்டியில் வந்து இறங்கி வண்டியையும் மாடுகளையும் வீட்டருகில் விட்டுவிட்டு நீதிமன்றத்திற்கு ஏகுவார்கள். 12 மணிக்கு வழக்கு தள்ளிப் போடப்படும் வீட்டில் உணவு தயாரிப்பு அறை குறையாக இருக்கும். இருந்து உண்ணாமல் போய்விடுவார்கள். என் மனைவியின் உழைப்பு, உணவுப் பொருள் நட்டம். இவைதான் கண்கண்ட பலன். வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பெற்றால் பகல் 2 மணிக்கு வந்து உண்டார்கள். இப்படிப் பல தொல்லைகள் K.N நல்லப்பரெட்டியாரால் நிகழ்ந்து கொண்டே இருக்கும். ஆனால் அவையெல்லாம் அவர் எங்கள்மீது வைத்திருக்கும். அன்புக்கும் பாசத்திற்கும் முன் "தீயினில் தூசாகும்" என்றவாறு மறைந்துவிடும்.

15 1949-இல் திருமணம் ஆகி 14 ஆண்டுகட்குப் பிறகு எங்கட்கு மகப்பேறு ஏற்பட்டது. 10-ஆம் நாள் நடைபெற்ற விருந்தில் கலந்து கொண்டு குழந்தையை ஆசீர்வதித்துப் பரிசளித்து ஊர் திரும்பியதாக நினைவு.

(6 1950-இல் காரைக்குடி சென்ற பிறகு எப்பொழுதோ ஓர் ஆண்டு காரைக்குடி வந்து எங்கள் இல்லத்தில் மூன்று நாட்கள் தங்கியிருந்தார். அப்போது அவரைக் குதிரை வண்டியை அமர்த்திக் கொண்டு கல்லூரி வளாகத்தில் வள்ளல் அழகப்பரால் நிறுவப் பெற்ற பல்வேறு பள்ளிகள், கல்லூரிகள் முதலியவற்றைக் காட்டினேன். அவற்றையெல்லாம் பார்த்து ஒரு தனிமனிதரின் முயற்சியையும் ஈடுபாட்டையும் கண்டு வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்தார்.

நினைவு - 10 : 1952-பிப்ரவரியில் நான் காரைக்குடியில் பணியாற்றிய காலம் என் மூத்தமகன் இராமலிங்கத்திற்கு மூன்று