பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 நீங்காத நினைவுகள்

வயது) எதுமலை காமாட்சியம்மன் கருப்பண்ண சுவாமி திருக்கோயிலில் சிவராத்திரியன்று முடி இறக்க எதுமலை செல்ல வேண்டிய நிலை என் அன்னையார் கோட்டத்துரில் இருந்தமையால் அங்குச் சென்றோம். நல்லப்ப ரெட்டியார் எதுமலை செல்ல மாட்டு வண்டி ஏற்பாடு செய்தார். இரவு உண்டி கொண்டு வந்தமையால் நேராகக் கோயிலை அடைந்தோம். பெரகம்பியிலிருந்து என் தாய்மாமன் வந்திருந்தார். பெரகம்பியிலிருந்து வேறு பல இளைஞர்களும் வந்திருந்தனர். இவர்களில் குறிப்பிடத்தக்கவர் பூனையார் வீட்டுத் தம்பு சிரம்பரம் என்பவர். இவர் முன்னிரவில் காத்தவராய சுவாமியின் கதையை இசையுடன் பாடி அனைவரையும் மகிழ்வித்தார். சிவராத்திரியில் உறங்காமலிருக்க இவர் காலட்சேபம் துணை செய்தது. விடியற்காலையில் மகனுக்கு முடி இறக்கப்பட்டது. வெந்நீரில் என் அன்னையார் பேரனைக் குளிப்பாட்டினார்கள். காணிக்கை செலுத்தி சுவாமி தரிசனம் செய்து கொண்டோம். பின்னர் எதுமலை வந்து என் நண்பர் பெத்துசாமி இல்லத்தில் சிற்றுண்டியை முடித்துக் கொண்டு கோட்டாத்தூர் திரும்பினோம்.

நினைவு 11 : என் அன்னையார் கோட்டாத்தூரில் தனியாக வேளாண்மை செய்து கொண்டு வருவது எனக்கு உடன்பாடில்லை. நான் விற்க வேண்டிய சொத்துகளை 1946இலும் 1952இலும் விற்றுவிட்டேன். என் தாயார் விற்க வேண்டிய நிலத்தை ரூ. 3500 சக்கு K.N. நல்லப்ப ரெட்டியாருக்கு விற்றுவிட்டு (1953) என்னை வந்து அடைந்துவிட்டார்கள். ஐந்து ஆண்டுகள் எங்களுடனும் பேரப் பிள்ளைகளுடனும் வாழ்ந்து 1959ல் காலகதி அடைந்துவிட்டார்கள்). K.N.நல்லப்ப ரெட்டியார் தம் தந்தையார் இறந்தபிறகு புதிய புன்செய் நிலங்களை வாங்கி நன்செய் நிலமாகவும், தரிசு நிலங்களை வாங்கி நன்செய் நிலங்களாகவும் விருத்தி செய்தார். தம் நிலங்களை யொட்டியிருந்த நிலங்களையும் வாங்கி ஒரு பெரிய சொத்தாக்கிப் பண்ணையைப் பெருகச் செய்தார். வீட்டிலும் புதிய கட்டடங்களைக் கட்டி வசதிகளைப் பெருக்கிக்

6 திருக்கோயில் ஊரிலிருந்து 3 கி.மீ தொலைவிலுள்ளது.