பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

K.N. நல்லப்ப ரெட்டியார் 13

கொண்டார் தாம் நிரந்தர நோயாளியாக இருந்தமையால் தாம் தங்கும் மாடியிலேயே நவீனமுறை கழிப்பறையை ஏற்படுத்திக் கொண்டார். பண்ணையும் பெருகியது. வருமானமும் பெருகியது. விருந்தோம்பலும் அதிகமாயிற்று.

நினைவு - 12 : நான் திருப்பதி சென்ற பிறகு (1960) கோட்டாத்துர் தொடர்பு அதிகம் இல்லை. இக்காலத்தில் அவர் ஊராட்சித் தலைவராக இரண்டு மூன்று முறைகள் தேர்ந்தெடுக்கப் பெற்றார். சிற்றுரிலும் அரசியல் தலைதூக்கிற்று. காங்கிரஸ், திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சிகளின் பெயர்களில் தேர்தல்கள் நடைபெற்றன. நல்லப்ப ரெட்டியார் இறுதிவரையிலும் தி.மு.க கட்சியில் இருந்ததாக நினைவு. செலவுகள் அதிகம். கையூட்டு இல்லை. விருந்தோம்பலில்தான் செலவுகள் தண்ணீராய் ஓடின.

நினைவு - 13 : நான் திருப்பதியிலிருந்தபோது வேப்பூர் முத்து வேங்கடசல ரெட்டியார் நோய்வாய்ப்பட்டிருந்தார். இவர் நல்லப்ப ரெட்டியாரின் பெரிய தாயாரின் மகன். தவிர, இவர் ஒரு மகான். வெள்ளை வேட்டி சாமியார். சத்துவகுணம் மிக்கவர். இவரைப் பார்க்க திருப்பதியிலிருந்து வந்ததாக நினைவு காரணம் இளமைக் காலத்திலிருந்தே என் உள்ளத்தைக் கவர்ந்தவர். வீரவழிபாட்டிற்குரியவராய் இருந்தவர். -

இவர் திருநாடு அலங்கரித்தபோதும் வந்தேன். K.N. நல்லப்ப ரெட்டியார்தான் அனைத்துக்காரியங்களையும் முன்னிருந்து நடத்தினார். முத்துவேங்கடாசலரெட்டியார் தம்காலத்தில் தம்மூரில் சிவப்பேறு அடைந்த ஒரு மகான் சமாதியில் ஒரு திருக்கோயில் எழுப்பி சிவலிங்கப் பிரதிட்டை செய்து நாள்தோறும் வழிபாடுகள் நடைபெற ஏற்பாடுகள் செய்திருந்தார். சேந்தமங்களத்திலிருந்து வந்திருந்த பெரியவர் ஒருவரைக் கொண்டு அன்றாட வழிபாடுகள் நடைபெறச் செய்தார். இத்திருக்கோயிலின் முன்வாயிலில் இடப்புறமாக முத்து, வேங்கடாசல ரெட்டியாரின் திருமேனி அடக்கம் செய்யப் பெற்றது. ஒரு மகான் திருவடியிலேயே இன்னொரு மகான் இருக்கட்டும் என்ற உயர் எண்ணத்தில் ஏற்பாடு செய்தவர் K.N.